கிரிக்கெட் வீரர் தோனி வாழ்க்கை படத்தில் சுஷாந்த் சிங் ராஜ்புத் நடித்தார். இதன் மூலம் சுஷாந்த் உலக அளவில் பிரபலமானார். ஆனால் துரதிருஷ்டவசமாக கடந்த 2020ம் ஆண்டு ஜூன் மாதம் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டார். இது பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு சிபிஐ விசாரணை நடக்கிறது. தோனி படத்தையடுத்து சச்சின் டெண்டுல்கர் வாழ்கை படம் உருவானது. இதுவும் வரவேற்பை பெற்றது. இதில் சச்சின் டெண்டுல்கரே நடித்திருந்தார். தற்போது 70, 80களின் அதிரடி மன்னன் இந்திய கிரிக்கெட் கேப்டன் கபில்தேவ் வாழ்க்கை படம் 83 என்ற பெயரில் உருவாகிறது.
இதில் கபில்தேவாக ரன்வீர் சிங் நடிக்கிறார். இப்படத்துக்காக கடுமையான கிரிக்கெட் பயிற்சியில் ஈடுபட்டதுடன் கபில்தேவின் மேனரிசம் பற்றி கற்றுக்கொண்டு நடித்தார். கபில்தேவ் மனைவி கதாபாத்திரத்தில் ரன்வீர் சிங்கின் மனைவி தீபிகா படுகோனே நடித்திருக்கிறார். கபில்தேவ் தலைமையில் இந்திய அணி ஆடியபோது அதில் சுனில் கவாஸ்கர், ஸ்ரீகாந்த் போன்ற பிரபல கிரிக்கெட் வீரர்கள் சாதனைகள் படைத்தனர். அந்த கதாபாத்திரங்களில் நடிக்க பொருத்தமான நடிகர்கள் தேர்வு செய்யப்பட்டனர். ஸ்ரீகாந்த் கதாபாத்திரத்தில் நடிகர் ஜீவா நடித்திருக்கிறார்.
கவஸ்கராக தஹிர் ராக் பாசின் நடித்துள்ளார். இப்படத்தின் பெரும்பகுதி முடிந்திருக்கிறது. இப்பட தயாரிப்பில் ரிலையன்ஸ் உள்ளிட்ட பட நிறுவனங்களுடன் தீபிகா படுகோனும் தயாரிப்பாளர்களில் ஒருவராக இணைந்திருக்கிறார். 1983ம் ஆண்டு முதல்முறையாக இந்தியா உலக கோப்பை வென்று சாதனை படைத்தது. அந்த சாதனையின் வரலாற்றை இப்படம் பேசுகிறது. இப்படம் கொரோனா கால சூழலால ஒடிடியில் வெளியாகும் என்று பேசப்பட்டது ஆனால் வரும் ஜூன் மாதம் தியேட்டரில் தமிழ், இந்தி, தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் ரிலீஸ் ஆக உள்ளது என்று பட தரப்பு கூறி உள்ளது.