ராஜமவுலியுடன் பான் இந்தியா படத்தில் சூப்பர் ஹீரோ.. ஆப்ரிகா காடுகளுக்கு செல்கின்றனர்..

by Chandru, Feb 11, 2021, 11:23 AM IST

பிரபாஸ், அனுஷ்கா நடித்த பாகுபலி இரண்டு பாக படங்களையும் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல மொழி களில் பான் இந்தியா படமாக உருவாக்கி வெளியிட்டு சாதனை படைத்தார் இயக் குனர் எஸ் எஸ்.ராஜமவுலி. வெளிநாடுகளிலும் இப்படம் வெளியாகி வசூல் சாதனை செய்தது. அந்த பட வெற்றிக்குப் பிறகு பான் இந்தியா படங்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. ராஜமவுலி தற்போது இயக்கி வரும் ஆர் ஆர் ஆர் படம் பிரமாண்ட பொருட்செலவில் பான் இந்தியப் படமாக உருவாகி வருகிறது. ராம் சரண், ஜுனியர் என் டி ஆர், அஜய்தேவ்கன், அலியாபட் என பல்வேறு மொழி நடிகர்கள் இணைந்து நடிக்கின்றனர். வெளிநாட்டு நடிகை ஒலிவியா மோரிஸ் என்பவரும் இதில் நடிக்கிறார்.

பான் இந்தியா வரிசையில் பிரபாஸ் நடிக்கும் ராதே ஷ்யாம், ஆதி புருஷ், சலார் மற்றும் நாக் அஸ்வின் இயக்கும் படம் என 4 படங்கள் உருவாகிறது. யஷ், ஸ்ரீநிதி ஷெட்டி நடிக்கும் கே ஜி எஃப் சேப்டர் 2 படம் உருவாகிறது. இதில் இந்தி நடிகர் சஞ்சய் தத், ரவீனா டாண்டன் ஆகியோர் நடிக்கின்றனர். சிரஞ்சீவி நடிக்கும் ஆச்சார்யா எனப் பல படங்கள் பான் இந்தியா படங்களாகத் திட்டமிடப்பட்டிருக்கிறது.

பாகுபலி படத்துக்கு பிறகே டோலிவுட் சூப்பர் ஹீரோ மகேஷ்பாபு நடிக்கும் பான் இந்தியா படத்தை ராஜமவுலி இயக்க உள்ளதாக கூறப்பட்டது. அதற்கான சரியான கதை மற்றும் கால் நேரம் அமையாமலிருந்தது. தற்போது அதற்கான நேரம் வந்திருக்கிறது. ஆர் ஆர் ஆர் பட ரிலீஸுக்கு பிறகு மகேஷ்பாபு படத்தை ராஜமவுலி இயக்குகிறார். இப்படத்துக்கான ஸ்கிர்ப்ட் டை ராஜமவுலி தந்தையும் பாகு பலி கதாசிரியருமான விஜயேந்திர பிரசாத் எழுதுகிறார். ஆக்‌ஷன் அதிரடி சாதனை படமாக உருவாகவிருக்கும் இப்படத்தின் படப் பிடிப்புகள் ஆப்ரிகா காடுகளில் நடத்த திட்டமிடப்பட்டிருக்கிறது. ராஜமவுலி படங்களில் விஎஃப் எக்ஸ் காட்சிகள் அதிகம் இடம்பெறுவதுபோல் மகேஷ் பாபு படத்திலும் வி எஃப் எக்ஸ் காட்சிகளுக்கு முக்கியத்துவம் தரப்பட உள்ளது.பிரபல தயாரிப்பாளர் டாக்டர் கே நாராயணா இப்படத்தைத் தயாரிக்க உள்ளார். இப்படத்திலும் இந்திய மொழியில் முக்கிய நடிகர், நடிகைகள் மற்றும் வெளிநாட்டு நடிகர்கள் நடிக்க உள்ளனர். இதுபற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை ராஜமவுலி விரைவில் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

You'r reading ராஜமவுலியுடன் பான் இந்தியா படத்தில் சூப்பர் ஹீரோ.. ஆப்ரிகா காடுகளுக்கு செல்கின்றனர்.. Originally posted on The Subeditor Tamil

More Cinema News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை