சிறு வயதிலே மீடியாவில் நுழைந்து கடின உழைப்பில் உயர்ந்து தனது குடும்பத்துக்கு உறுதுணையாய் நின்றவர் தான் டிடி என்கிற திவ்யதர்ஷினி. இவர் மேடையில் ஏறினாலே மொக்கையான நிகழ்ச்சி கூட செம கலகட்டும். விஜய் டிவியின் செல்ல பிள்ளையாய் வாழ்ந்து வரும் திவ்யதர்ஷினி ஏராளமான நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார். இவருக்கு வயது ஏறினாலும் அழகு குறையவில்லை என்று அவரது ரசிகர்கள் டிடியை தலை மேல் தூக்கி வைத்து கொண்டாடி வருகின்றனர். சொல்லப்போனால் இவர் பல 90's ஆண்களின் கனவு கன்னியாக விளங்கி வருகிறார்.
இவர் சின்னத்திரை மட்டும் இல்லாமல் வெள்ளித்திரைக்கு சென்று பல திரைப்படங்களிலும் நடித்துள்ளார். பல நிகழ்சிகளை தொகுத்து சாதனை படைத்த டிடி திருமண வாழ்க்கையில் ஆழம் அறியாமல் காலை விட்டுவிட்டார் என்று தான் கூறவேண்டும். இவரது நண்பரான ஸ்ரீகாந்த் என்பவரை பல ஆண்டுகளாக காதலித்து பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு நடிக்க கூடாது, எந்த நிகழ்ச்சிக்கு செல்ல கூடாது என்று புகுந்த வீட்டில் இருந்து கட்டளையிட்டதால் கணவன் மனைவி இடையே பிரச்சனைகள் நாளுக்கு நாள் வெடிக்க தொடங்கியது.
இதனால் சில நாட்கள் இருவரும் பிரிந்து தனித்தனியே வாழ்ந்ததாக கூறப்படுகிறது. பிறகு இருவரும் விவாகரத்து பெற்று முழுவதுமாக பிரிந்து விட்டனர். டிடி தொடர்ந்து அவரது வேலையில் தீயாய் ஈடுபட்டு கொண்டிருந்த நிலையில் டிடியின் உறவினர்கள் அவருக்கு இரண்டாவதாக திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்துள்ளனர். மாப்பிள்ளை கேரளாவை சேர்ந்த தொழிலதிபர் என்றும் இவருக்கு 40 வயதுக்கு மேல் கடந்துவிட்டது என்ற செய்திகள் ஊடகங்களில் வெளியாகி வருகிறது. ஆனால் இவை உண்மையா என்பது டிடி தரப்பில் இருந்து எந்த உறுதியும் அளிக்கபடவில்லை.