அதிகாலை 4 மணிக்கு பாக்ஸிங் கற்ற நடிகை..

by Chandru, Feb 13, 2021, 10:07 AM IST

நெருங்கி வா முத்தமிடாதே படத்தில் நடித்தவர் ஸ்ருதி ஹரிஹரன். நிபுணன், நிலா, அமெரிக்கா மாப்பிள்ளை போன்ற படங்கள் கன்னடத்தில் லுசியா, நதிசராமி உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார். இவர் தற்போது வதம் என்ற வெப் சீரிஸில் நடிக்கிறார். இதில் நடித்தது பற்றி ஸ்ருதி ஹரிஹரன் கூறியதாவது:தமிழ், கன்னட படங்களில் நடித்த பிறகு வித்தியாசமாக ஏதாவது செய்ய வேண்டும் என்று எண்ணிக்கொண்டிருந்தேன். அப்போதுதான் வதம் வெப் சீரிஸில் நடிக்கும் வாய்ப்பு வந்தது. போலீஸ் இன்ஸ்பெக்டர் வேடம் என்றனர் . நான் ஏதாவது வித்தியாசமாக முயல வேண்டும் என்று எண்ணிக் கொண்டிருந்தபோது இந்த வாய்ப்பு வரவே ஒப்புக்கொண்டேன்.

ஆனால் படங்களில் நடனம் மட்டும் ஆடி இருக்கிறேன் ஜம்ப் செய்து அடிச்சி கீழே விழுந்து ஆக்‌ஷன் காட்சிகளில் எல்லாம் நடித்ததில்லை. பிறகு இயக்குனரை சந்தித்தேன். அவர் கதை சொல்லத் தொடங்கினார். முதல் பத்து நிமிடத்திலேயே ஒரு இயக்குனர் படம் எப்படி எடுக்கப் போகிறார். அவரால் முடியுமா என்பதெல்லாம் தெரிந்துவிடும். வெங்கடேஷ் பாபு கதை சொல்ல தொடங்கினார். இரண்டரை மணி நேரம் எப்படி சென்றதென்றே தெரியவில்லை அவ்வளவு தெளிவாகச் சொல்லி முடித்தார். அவர் மிகச் சிறந்த இயக்குனர்களில் ஒருவராக வருவார். அப்படியே நடிச்சும் காட்டினார். படப்பிடிப்பில் நாமெல்லாம் டென்ஷனாக இது செய்ய வேண்டுமே அது செய்ய வேண்டுமே என்று டென்ஷனாக இருப்போம் ஆனால் இயக்குனர் எந்த டென்ஷனும் இல்லாமல் சிரித்துக்கொண்டே அமைதியாக படப்பிடிப்பு நடத்துவார். நான் ஏற்ற சக்தி பாண்டியின் கதாபாத்திரத்தில் நியாயமாக நடித்திருக்கிறேன் என்று நம்புகிறேன்.

எதிர்காலத்தில் அவருடன் ஒரு நடிகையாக இல்லாவிட்டாலும் ஏதாவது ஒருபகுதியாக அவரது டீமில் பணியாற்ற ஆசைப்படுகிறேன். இந்த சீரியலில் 4 பெண்கள் நடித்திருக்கிறோம். 4 பெண்கள் ஒரு செட்டில் இருக்கிறார்கள் என்றால் உடனே உங்கள் மனதில் இவர்களுக்குள் அடிதடி, சண்டை நடந்திருக்கும் என்று நினைப்பார்கள். அஸ்வதி பிரிதிஷா, செம்மலர் ஆகிய 3 பெண்களும் மிகப்பிரமாதமாக நடித்தார்கள். நடிகைகளாக மட்டுமல்லாமல் சக பெண்களாக அவர்கள் நன்கு பழகினார்கள். அவர்களிடமிருந்து நான் நிறையக் கற்க வேண்டும். இந்த சீரிஸில் நடித்திருக்கும் ஹீரோ விவேக் ராஜகோபால் நன்கு ஆதரவு தந்தார். இந்த சீரிஸுக்காக அதிகாலை 4 மணிக்கு பாக்ஸிங் பயிற்சி பெற வேண்டி இருந்தது. அதற்காக ஒரு பயிற்சியாளர் இருந்தார் அவர் பெயர் கணேஷ். விளை யாட்டில் மிகவும் ஈடுபாடு கொண்டவர். காலை 4 மணிக்கு அங்குச் சென்று தூக்கக் கலக்கத்துடன் இருந்தாலும் அவர் தரும் பயிற்சியில் நமக்கு பலம் வந்துவிடும். ஆக்‌ஷன் காட்சிகளில் நடிக்கும் ஸ்டண்ட் வீரர்களைப் பாராட்டியே ஆக வேண்டும். அவர்கள் உயிரைப் பணயம் வைத்து நடிக்கிறார்கள்.இவ்வாறு ஸ்ருதி ஹரிஹரன் கூறினார்.

வதம் பற்றி இயக்குநர் வெங்கடேஷ் பாபு கூறிய தாவது:மிக அழுத்தமான கதைக்களம் கொண்ட இத்தொடர், துணிவும் நேர்மையும் கொண்ட ஒரு பெண் காவல் அதிகாரியின் கதையை, ஒரே கட்டமாகப் பார்க்கும் ஆவலை, பரபரப் பை பார்வையாளர்களிடத் தில் ஏற்படுத்தும். கொலை குற்ற வழக்கை, விசாரிக்கும் கதைகளை, ரசிக்கும் ரசிகர் களுக்கு இத்தொடர் பெரு விருந்தாக அமையும். இத்தொடரின் கதை இளமையான, பயமற்ற, துணிவு மிகுந்த சக்தி பாண்டியன் எனும் காவல் அதிகாரி, நீதிக்காக சட்டத்தையும் வளைக்கும் கதையினை கூறுவதாகும். ஸ்ருதி ஹரிஹரன் மிகுந்த அர்ப்பணிப்புடன் சக்தி பாண்டியன் பாத்திரத்திற்கு உயிர் தந்துள்ளார். மேலும் இத்தொடரில் பங்கு கொண்ட அனைவரும் பரபரப்பான தொடராக, இத்தொடர் உருவாகப்பட்டுள்ளனர். எம் எக்ஸ் பிளேயரில் வதம் தொடர் வெளியாகிறது.இவ்வாறு இயக்குனர் கூறினார்.

You'r reading அதிகாலை 4 மணிக்கு பாக்ஸிங் கற்ற நடிகை.. Originally posted on The Subeditor Tamil

More Cinema News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை