பிரபாஸ்-பூஜா ஹெக்டே நடிக்கும் பட ரிலீஸ் தேதி.. சிறப்பு பார்வை வெளியீடு..

Advertisement

காதலர் தினமான இன்று பிரபாஸ் மற்றும் பூஜா ஹெக்டே ரசிகர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி அளிக்கும் வகையில், ராதே ஷியாம் படக்குழு திரைப்படம் வெளியாகும் தேதியை அறிவித்துள்ளதோடு, படத்திலிருந்து ஒரு காட்சியையும் வெளியிட்டுள்ளது. ஆவலுடன் எதிர்பார்க்கப்படும். பன்மொழிப்படமான ராதே ஷியாம் 2021 ஜூலை 30 அன்று வெளியாகும். காதல் ததும்பும் கதாபாத்திரத்தில் பத்து வருடங்களுக்கு பிறகு இப்படத்தில் பிரபாஸ் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். ராதா கிருஷ்ணகுமார் இயக்கும் திரைப்படத்தை யுவி கிரியேஷன்ஸ் சார்பில் வம்சி மற்றும் பிரமோத் தயாரிக்கின்றனர். இன்று வெளியிடப்பட்டுள்ள காட்சியானது ரோமில் படமாக்கப்பட்டுள்ளது.

ரயில் ஒன்றில் தொடங்கும் காணொலி, காடுகளை நோக்கி பயணிக்கிறது. இத்தாலி மொழியில் செய் உன் அங்கெலோ? தேவோ மோரிர் பெர் இன்காண்ட்ரர்டி? என்று காதல் பொங்க பூஜாவிடம் பிரபாஸ் உரையாடுகிறார். இதன் பொருள் என்னவாக இருக்கும் என்று பிரபாஸ் ரசிகர்கள் இணையத்தில் தேடி வருகின்றனர். மேலும் பிரபாஸிடன் பேசும் பூஜா உனக்கென்ன ரோமியோன்னு நெனப்பா என்று கேட்க, சே, அவர் காதலுக்காக செத்துட்டாரு எனக்கு அதெல்லாம் பழக்கமில்ல என்று பதில் அளிக்கிறார் பிரபாஸ். இக்காணொலி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ள நிலையில், காதலர் தினத்திற்கான சரியான பரிசாக இது அமைந்துள்ளது என அவர்கள் கூறி வருகின்றனர்.

இந்த தசாப்தத்தின் மிகப்பெரிய காதல் படமாக ராதே ஷியாம் இருக்கும் என்று ஏற்கனவே எதிர்பார்க்கப்படும் நிலையில் இந்த சிறப்பு காட்சி வெளியாகி ரசிகர்களை பரவசத்தில் ஆழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. படத்தின் ப்ரீ-டீசர் சமீபத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது நினைவிருக்கலாம். இதுதவிர பிரபாஸ் தற்போது கே ஜி எஃப் இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் சலார், ஓம் ராவுத் இயக்கத்தில் ஆதி புருஷ் படங்களில் நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு தொடங்கி நடக்கிறது. சலார் படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு தெலங்கானாவில் நடந்து முடிந்தது. இதில் பிரபாஸுடன் ஸ்ருதிஹாசன் கலந்துகொண்டு நடித்தார். இந்த படங்கள் தவிர நாக் அஸ்வின் இயக்கும் படமொன்றிலும் பிரபாஸ் நடிக்க ஒப்பந்தம் ஆகி இருக்கிறார். இதன் படப்பிடிப்பு அடுத்த வருடம் தொடங்கும் என்று தெரிகிறது.

Advertisement
மேலும் செய்திகள்
don-t-want-to-answer-idiots-nayanthara-kattam-on-the-red-tea-issue
முட்டாள்களுக்கு பதில் சொல்ல விரும்பவில்லை... செம்பருத்தி டீ விவகாரத்தில் நயன்தாரா காட்டம்
coming-to-film-promotion-3-lakhs-to-give-actress-aparnitha-over-game
பட புரமோஷனுக்கு வரனுமா? 3 லட்சம் தரணும்... நடிகை அபர்ணிதா ஓவர் ஆட்டம்... சுரேஷ் காமாட்சி காட்டம்
actress-varalakshmi-marriage
நடிகை வரலட்சுமி திருமணம்... சரத்குமார் அட்டகாச ஆட்டம்... தாய்லாந்தில் களை கட்டும் திருமணம்
director-vasanthabalan-tested-covid-positive
கொரோனா தொற்று உறுதி – மருத்துவமனையில் இயக்குநர் வசந்தபாலன் அனுமதி
ratchasan-2-part-is-on-the-way
ராட்சசன் 2வது பாகம் தயார்.. விஷ்ணு விஷால் இன்ப அதிர்ச்சி..!
deepika-padukone-tests-positive-for-covid-19
நடிகை தீபிக படுகோனுக்கு என்ன ஆச்சு? – ரசிகர்கள் கலக்கம்!
priya-bhavani-shankar-hits-back-to-the-trolls
சீட்ட தூக்கிட்டு நில்லுன்னு அர்த்தமில்ல – பிரியா பவானி சங்கரின் மிரட்டல் அடி!
pia-bajpai-brother-passes-away-due-to-covid-19
மருத்துவ உதவி கேட்டு அலைந்த பிரபல நடிகைக்கு நிகழ்ந்த சோகம்!
arrahman-congrats-to-stalin
ஏ.ஆர்.ரஹ்மான் போட்ட ட்வீட்.. உடனே ரிப்ளே செய்த ஸ்டாலின் – வைரலாகும் பதிவு!
rashmika-mandanna-says-rcb-is-her-favourite-team-gone-viral
ஐபிஎல் அணி குறித்து நடிகை ராஷ்மிகா என்ன சொன்னார் தெரியுமா?

READ MORE ABOUT :

/body>