மூத்த காதல் ஜோடிகள் மாலத்தீவில் தேனிலவு..

இளம் ஜோடிகள் திருமணத்துக்குப் பிறகு தேனிலவு பயணம் என்பது இளமைக்கு விருந்தாகக் கிடைக்கும் வாய்ப்பு. இரண்டாவது திருமணம் செய்த ஒரு சினிமா ஜோடி 2வது தேனிலவு சென்று திரையுலகினரையும், ரசிகர்களையும் அதிர்ச்சியிலும், ஆச்சரியத்திலும் ஆழ்த்தி உள்ளனர்.முன்னதாக கடந்த ஆண்டு காஜல் அகர்வால், நிஹாரிகா, ரானா போன்றவர்கள் திருமணம் முடிந்து தங்கள் துணைகளுடன் மாலத்தீவுக்குத் தேனிலவு சென்றனர். உல்லாசமாக நாட்களைக் கழித்து மகிழ்ந்தனர். அதேபோல் நடிகைகள் ரகுல் ப்ரீத் சிங், சோனாக்‌ஷி சின்ஹா, வேதிகா போன்ற நடிகைகள் சிங்கிளாக இருந்தாலும் விடுமுறை பயணமாக மாலத்தீவு சென்றனர்.

திரைப்பட பாடகி சுனிதா மற்றும் டிஜிட்டல் மீடியா தொழிலதிபர் ராம் ஆகியோருக்கு கடந்த மாதம் இறுதியில் ஐதராபாத்தில் திருமணம் நடந்தது. இதில் ராம் முதல் திருமணம் முடிந்து மனைவியை பிரிந்தவர். அதேபோல் சுனிதாவும் முதல் திருமணம் ஆகி 2 குழந்தைகளுக்குத் தாய் ஆன பின்னர் கணவருடன் விவாகரத்து பெற்றுப் பிரிந்து வாழ்ந்து வந்தார். இந்நிலையில் ராம், சுனிதா இருவருக்கும் காதல் மலர்ந்தது. இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தனர். இவர்கள் திருமணத்துக்கு சுனிதாவின் மகன் மகள் இருவருமே சம்மதம் தெரிவித்ததுடன் உடனிருந்து தங்களது தாயின் திருமணத்தை நடத்தி வைத்தனர். அவர்களின் திருமண விழாவை பொது மக்கள், ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் விவாதப் பொருளாக மாறியது.

ஊர் என்ன பேசினாலும் அதுபற்றி கவலைப்படாமல் இந்த முதிர் ஜோடிகள் வாழ்க்கையை அனுபவிக்கத் தொடங்கி விட்டனர். சமீபத்தில் சுனிதா-ராம் ஜோடி தேனிலவுக்காக மாலத்தீவு சென்றது. அந்த இடம் இருவருக்கும் மிகவும் பிடித்த இடமாக மாறியுள்ளது.காதலர் தின விடுமுறையில் மாலத்தீவில் தான் தங்கி இருக்கும் ரிசார்ட்டிலிருந்து இன்ஸ்டாகிராமில் தனது படத்தைப் பகிர்ந்தார் சுனிதா.43 வயதான சுனிதாவுக்கு முதல் திருமணத்திலிருந்து ஒரு மகள் மற்றும் மகன் உள்ளனர். அவரது மகன் ஒரு எம்.என்.சி. யில் பணிபுரிகிறார், அதே நேரத்தில் அவரது மகள் இசைத் துறையில் பாடகியாகத் தொடர்கிறார். ராமுக்கு முந்தைய திருமணத்திலிருந்து குழந்தைகள் இல்லை.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
actress-varalakshmi-marriage
நடிகை வரலட்சுமி திருமணம்... சரத்குமார் அட்டகாச ஆட்டம்... தாய்லாந்தில் களை கட்டும் திருமணம்
director-vasanthabalan-tested-covid-positive
கொரோனா தொற்று உறுதி – மருத்துவமனையில் இயக்குநர் வசந்தபாலன் அனுமதி
ratchasan-2-part-is-on-the-way
ராட்சசன் 2வது பாகம் தயார்.. விஷ்ணு விஷால் இன்ப அதிர்ச்சி..!
deepika-padukone-tests-positive-for-covid-19
நடிகை தீபிக படுகோனுக்கு என்ன ஆச்சு? – ரசிகர்கள் கலக்கம்!
priya-bhavani-shankar-hits-back-to-the-trolls
சீட்ட தூக்கிட்டு நில்லுன்னு அர்த்தமில்ல – பிரியா பவானி சங்கரின் மிரட்டல் அடி!
pia-bajpai-brother-passes-away-due-to-covid-19
மருத்துவ உதவி கேட்டு அலைந்த பிரபல நடிகைக்கு நிகழ்ந்த சோகம்!
arrahman-congrats-to-stalin
ஏ.ஆர்.ரஹ்மான் போட்ட ட்வீட்.. உடனே ரிப்ளே செய்த ஸ்டாலின் – வைரலாகும் பதிவு!
rashmika-mandanna-says-rcb-is-her-favourite-team-gone-viral
ஐபிஎல் அணி குறித்து நடிகை ராஷ்மிகா என்ன சொன்னார் தெரியுமா?
actor-sivakarthikeyan-birthday-wishes-to-ajith
அஜித்துக்கு இப்படியொரு பிறந்தநாள் வாழ்த்து – சிவகார்த்திகேயனை பாராட்டும் ரசிகர்கள்!
actor-surya-statement-regarding-director-kv-anand-dead
ஒரு போர்களத்தில் நிற்பதை போல உணர்ந்தேன் – நினைவுகளை பகிரும் நடிகர் சூர்யா!
Tag Clouds

READ MORE ABOUT :