இந்த காலத்தில் திரைக்கதை எழுதுவது கடினமாகி விட்டது.. நாயே பேயே பட விழாவில் கே.பாக்யராஜ் பேச்சு..

by Chandru, Feb 15, 2021, 14:55 PM IST

எடிட்டர் கோபி கிருஷ்ணாவின் கட்டிங் ஒட்டிங் ஸ்டுடியோஸ் மற்றும் கலை தி ஆர்ட் புரொடக்ஷன்ஸ் டாக்டர். ரேவதி ரெங்கசாமி, கலையரசி சாத்தப்பன் இணைந்து தயாரிக்கும் படம் நாயே பேயே.நடன இயக்குனர் தினேஷ் நாயகனாக நடிக்கும் இந்த படத்தில் கதாநாயகியாக ஐஸ்வர்யா நடிக்க, இவர்களுடன் ஆடுகளம் முருகதாஸ், ஷாயாஜி ஷிண்டே, ரோகேஷ், கிருஷ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.ஒளிப்பதிவு நிரன் சந்தர், இசை என்.ஆர்.ரகுநந்தன், கலை - சுப்பு அழகப்பன், படத் தொகுப்பு கோபி கிருஷ்ணா. தயாரிப்பு - கோபி கிருஷ்ணா, கலையரசி சாத்தப்பன், டாக்டர். ரேவதி ரெங்கசாமி, கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் சக்திவாசன்.

இப்படத்தின் ஆடியோ டிரெய்லர் இன்று வெளியிடப்பட்டது. டைரக்டர் கே.பாக்யராஜ், தயாரிப்பாளர் எடிட்டர் மோகன் இணைந்து வெளியிட்டனர்.நிகழ்ச்சியில் கே.பாக்யராஜ் பேசியதாவது:நாயே பேயே என்ற சின்னவீடு கட்டியதாக இயக்குனர் சக்தி வாசன் கூறினார். ரொம்ப சிரமப்பட்டுச் சிறப்பான முறையில் காட்டிய இயக்குனருக்கு வாழ்த்துக்கள். சின்ன வீட்டில் புகுந்துவிளையாடி இருக்கும் டான்ஸ் மாஸ்டர் -நடிகர் தினேஷுக்கு வாழ்த்துக்கள். இந்த சின்ன வீட்டுக்கு அனுபவம் வாய்ந்த எடிட்டர் மோகனை வந்து வாழ்த்துங்கள் என்று அழைத்திருக்கிறார்கள்.

இந்த படத்தில் சிறப்பான விஷயம் என்ன வென்றால் எடிட்டர் கோபி கிருஷ்ணா தயாரிப்பாளராகி இருக்கிறார். மிகவும் சந்தோஷம் அதைவிடச் சந்தோஷம் என்னவென்றால் ஒரு புது டைரக்டருக்கு வாய்ப்பு கொடுத்திருக்கிறார். அதே போல் தினேஷ் மாஸ்டர் ஒரு குப்பையின் கதை செய்த போதே நான் பாராட்டினேன். இந்தப் படத்திலும் டிரைய்லரில் நன்கு பாவனைகள் காட்டி நடித்திருக்கிறார். இங்குப் பேசும்போது அடிக்கடி முந்தானை முடிச்சு பாத்ததாக கூறினார்கள். நானே இப்போது முந்தானை முடித்துப் படத்தை மறுபடியும் மறுபடியும் போட்டு பார்த்துக்கொண்டிருக்கிறேன். ஏனென்றால் மீண்டும் முந்தானை முடிச்சு படமாகிறது. அந்த காலத்தில் தவக்களை வைத்து எடுத்த காமெடி காட்சிகள் பழசாகி விட்டது இந்த காலத்துக்கு செட்டாகாது. இந்த காலத்துக்கு ஏற்றபடி காமெடி காட்சிகள் எடுக்க நிறைய யோசிக்க வேண்டி இருந்தது. கோயில் தர்மகர்த்தா வீட்டில் இருக்கும் டொனேஷன் ரசீதைத் திருடி ஊரெல்லாம் 500, 1000ம் என்று வசூலிப்பார்கள். எப்படி இவ்வளவு பணம் வசூலித்தீர்கள் என்று ஊரார் கேட்கும்போது வன காளி அம்மன் பேரைச் சொல்லி வசூலித்தோம்.

கர்ப்பமாண பெண்ணிடம் சென்று டொனேஷன் கேட்டால் கொடுக்க முடியாது என்றார். உடனே இப்படித்தான் இன்னொரு அம்மா சொன்னாங்க அவங்களுக்கு பிறந்த குழந்தை தவக்களை மாதிரி இருந்தது என்று சொல்லிப் பயமுறுத்தினோம் உடனே அந்தம்மா 500ம் ரூபா கொடுத்துவிட்டார்கள் என்பார்.இப்படி முந்தானை முடிச்சு2 படத்துக்கு புதிய புதிய காட்சிகள் யோசித்து யோசித்து திரைக்கதை அமைத்து வருகிறோம். அதனால் தான் சொன்னேன் இப்போது திரைக்கதை எழுதுவது கடினமாகிவிட்டது. நாயே பேயே படம் வெற்றி அடைய வாழ்த்துக்கள்.இவ்வாறு கே.பாக்யராஜ் கூறினார்.

நிகழ்ச்சியில் நடிகர்கள் இயக்குனர்கள் மோகன், காளி ரங்கசாமி, நடிகர்கள் தினேஷ், மகேந்திரன், ரோபோ சங்கர், அருள்மணி, அப்புக்குட்டி, ஜீவா, இசை அமைப்பாளர் ரகுநந்தன், ஜாகுவார் தங்கம், எழில் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

You'r reading இந்த காலத்தில் திரைக்கதை எழுதுவது கடினமாகி விட்டது.. நாயே பேயே பட விழாவில் கே.பாக்யராஜ் பேச்சு.. Originally posted on The Subeditor Tamil

More Cinema News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை