வலிமை `அப்டேட் தாமதத்தின் பின்னணி என்ன?!

Advertisement

நடிகர் அஜித் நடித்து வரும் வலிமை திரைப்படத்தின் அப்டேட்டுக்கு வருட கணக்கில் காத்திருக்கும் ரசிகர்கள். எதற்கு அப்பேட்டு இன்று வரை வெளியாகவில்லை என்று ரசிகர்கள் மத்திய பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிப்பில், ஹெச். வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் நடித்த நேர்கொண்ட பார்வை படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இதனையடுத்து, இந்த கூட்டணி மீண்டும் தொடங்கியுள்ளது. இதன்படி, போனி கபூர் தயாரிப்பில், ஹெச். வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் வலிமை படத்தில் நடித்து வருகிறார்.

கடந்த 2019-ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் வலிமை படம் பூஜையுடன் தொடங்கியது. ஆனால், படப்பிடிப்பு தொடங்கிய 1 வருடம் 4 மாதங்கள் ஆகியும் படத்தின் அடுத்தகட்ட அப்டேட்டுகள் எதுவும் படக்குழு வெளியிடவில்லை. அதன் தாக்கமே ட்விட்டரில் தினம் தினம் 'வலிமை' அப்டேட் தொடர்பான ஹேஷ்டேக்குகள் ட்ரெண்டிங்கில் உள்ளன. சோஷியல் மீடியா என்பதையும் தாண்டி கவனம் பெறுவதற்காக கிரிக்கெட் போட்டிகள் தொடங்கி மோடி வருகையின் போது கூட 'வலிமை' அப்டேட் என குரலெழுப்புகின்றனர் ரசிகர்கள். வலிமை அப்டேட் குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் கோரிக்கை வைக்கும் அளவிற்கு சென்று விட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நடிகர் அஜித் இன்று அறிக்கையும் வெளியிட்டுள்ளார்.

இருப்பினும், ஒவ்வொரு மொழியிலும் பெரிய நடிகர்களை கையாளுவதால் அவசரமின்றி சரியாக இடைவெளியில் படத்தை வெளியிடுவதில் போனி கபூர் கவனம் செலுத்துகிறார். கொரோனா தொற்று காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வலிமை படப்பிடிப்பு அதன் பின்னர் முழு வீச்சில் நடைபெற்றது. நீண்ட இடைவெளிக்கு பிறகு எதிர்பார்ப்புடன் அஜித் படம் வெளியாகவுள்ளதால் செய்யும் சம்பவத்தை சரியாகவும், சிறப்பாகவும் செய்யவே படக்குழு திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

ரசிகர்களின் ஆர்வம் புரிந்தாலும், அவசரகதியில் அரைகுறையாக எதையும் கொடுக்கக் கூடாது என்பதையே படக்குழு யோசிப்பதாக தெரிகிறது. அதேவேளையில் இந்திய அளவில் மிகப்பெரிய தயாரிப்பாளராக போனி கபூர் ஒரு படத்தின் அப்டேட்டை கொடுக்காமல் இழுத்தடிப்பாரா எனவும் யோசிக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் தெரிவிக்கின்றனர்.

Advertisement
மேலும் செய்திகள்
don-t-want-to-answer-idiots-nayanthara-kattam-on-the-red-tea-issue
முட்டாள்களுக்கு பதில் சொல்ல விரும்பவில்லை... செம்பருத்தி டீ விவகாரத்தில் நயன்தாரா காட்டம்
coming-to-film-promotion-3-lakhs-to-give-actress-aparnitha-over-game
பட புரமோஷனுக்கு வரனுமா? 3 லட்சம் தரணும்... நடிகை அபர்ணிதா ஓவர் ஆட்டம்... சுரேஷ் காமாட்சி காட்டம்
actress-varalakshmi-marriage
நடிகை வரலட்சுமி திருமணம்... சரத்குமார் அட்டகாச ஆட்டம்... தாய்லாந்தில் களை கட்டும் திருமணம்
director-vasanthabalan-tested-covid-positive
கொரோனா தொற்று உறுதி – மருத்துவமனையில் இயக்குநர் வசந்தபாலன் அனுமதி
ratchasan-2-part-is-on-the-way
ராட்சசன் 2வது பாகம் தயார்.. விஷ்ணு விஷால் இன்ப அதிர்ச்சி..!
deepika-padukone-tests-positive-for-covid-19
நடிகை தீபிக படுகோனுக்கு என்ன ஆச்சு? – ரசிகர்கள் கலக்கம்!
priya-bhavani-shankar-hits-back-to-the-trolls
சீட்ட தூக்கிட்டு நில்லுன்னு அர்த்தமில்ல – பிரியா பவானி சங்கரின் மிரட்டல் அடி!
pia-bajpai-brother-passes-away-due-to-covid-19
மருத்துவ உதவி கேட்டு அலைந்த பிரபல நடிகைக்கு நிகழ்ந்த சோகம்!
arrahman-congrats-to-stalin
ஏ.ஆர்.ரஹ்மான் போட்ட ட்வீட்.. உடனே ரிப்ளே செய்த ஸ்டாலின் – வைரலாகும் பதிவு!
rashmika-mandanna-says-rcb-is-her-favourite-team-gone-viral
ஐபிஎல் அணி குறித்து நடிகை ராஷ்மிகா என்ன சொன்னார் தெரியுமா?

READ MORE ABOUT :

/body>