கீர்த்தி சுரேஷ்-அனிருத் காதல் விவகாரம்... கிளப்பிவிட்டது யார்?

Advertisement

நடிகை கீர்த்தி சுரேஷ் பற்றி நேற்று நெட்டில் வலம் வந்த தகவல் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. கீர்த்தியும் இசை அமைப்பாளர் அனிருத்தும் காதலிப்பதாகவும். இருவரும் அடிக்கடி டேட்டிங் செல்கின்றனர். தங்களது உறவை அடுத்த கட்டமாகத் திருமணத்துக்கு எடுத்துச் செல்லவிருப்பதாகவும் தகவல் பரவியது.கீர்த்தி சுரேஷ் குறுகிய காலத்தில் புகழின் உச்சிக்குச் சென்றார். நடிக்க வந்த சில வருடங்களிலேயே நடிகையர் திலகம் சாவித்ரி வாழ்க்கை படத்தில் சிறப்பாக நடித்தமைக்காக தேசிய விருது பெற்றார். விஜய், விஷால் உள்ளிட்ட பிரபல ஹீரோக்களுடன் ஜோடி போட்டவர். தெலுங்கிலும் முன்னனி ஹீரோக்கள் ஜோடியாக நடிக்கிறார்.

தற்போது ரஜினிகாந்த் மகளாக அண்ணாத்த படத்தில் நடிக்கிறார். இசை அமைப்பாளர் அனிருத் கோலிவுட்டில் பிரபல இசை அமைப்பாளர் ஆவார். மேலும் ரஜினிகாந்த்தின் உறவினர். கீர்த்தி - அனிருத் இருவரும் தங்களைப் பற்றி வந்திருக்கும் கிசுகிசுவுக்கு பதில் அளிக்காமல் மவுனம் காத்து வந்தனர். இதனால் கிசுகிசு உண்மையாக இருக்குமே என்று பேசத் தொடங்கினர்.கீர்த்தி சுரேஷை பொறுத்தவரை கடந்த ஆண்டு அவரது திருமண கிசி கிசு வெளியானது. அப்போது பா ஜ தலைவர் ஒருவரின் மகனை மணக்க உள்ளதாக கூறப்பட்டது. ஆனால் அதை கீர்த்தியின் குடும்பத்தினர் மறுத்தனர், அதேபோல் அனிருத் பற்றியும் கிசு கிசு வெளியானது, நடிகை ஆண்ட்ரியாவுடன் காதல், பின்னணி பாடகியுடன் காதல் என்று கிசுகிசு பரவியது அவைகளும் பிறகு கப்சிப் ஆகிவிட்டன.

கீர்த்தி - அனிருத் காதல் கிசுகிசு பரவியதற்குக் காரணம் இருவரும் ஜோடியாக இருப்பது போன்ற ஒரு படத்தைக் கீர்த்தி சுரேஷ் சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்தார். அதுதான் இந்த கிசுகிசுவுக்கு காரணம் என்று கூறப்படுகிறது. இதுபற்றி இருதரப்பிலும் விசாரித்தபோது கீர்த்தி - அனிருத் காதல் என்ற தகவல் முற்றிலும் அடிப்படை ஆதாரமற்றது. இருவரும் நல்ல நண்பர்களாகவே உள்ளனர். தங்களது திரையுலக பணியில் பிஸியாக இருக்கின்றனர் என்று தெரிவிக்கப்பட்டது.கீர்த்தி சுரேஷ் இயக்குனர் செல்வராகவனுடன் சாணிகாயிதம் படத்தில் நடிக்கிறார். மேலும் ரஜினி காந்துடன் அண்ணாத்த படத்திலும் நடிக்கிறர். தற்போது அவர் தெலுங்கு படப்பிடிப்புக்காக மகேஷ் பாபுவுடன் துபாயில் பங்கேற்று நடித்து வருகிறார். அனிருத் விஜய் நடிக்க நெல்சன் திலீப்குமார் இயக்கும் படத்திற்கும், ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் படத்திற்கும் இசை அமைக்க ஒப்புக்கொண்டிருக்கிறார். சினிமா நட்சத்திர காதல் என்பது எப்போது மலரும், எப்போது கல்யாணத்தில் முடியும் என்பது கணிக்க முடியாது.

இதுபோன்ற கிசுகிசுக்கள் பரவ காரணம் பல நட்சத்திரங்கள் ஜோடியாக சுற்றி வருகின்றனர். காதல் என்று தகவல் பரவினால் நண்பர்களாக பழகுகிறோம் என்று கூறுவது, ஒரு சந்தர்ப்பத்தில் அவர்கள் திடீர் திருமணம் செய்து கொள்வது அவ்வபோது நடப்பதுதான் காரணம்.திருமணம் 2 வருடம் கழித்துத்தான் நடக்கும், எனக்குக் காதலன் யாரும் இல்லை என்று கூறி வந்த நடிகை காஜல் அகர்வால் லாக்டவுனில் தனது ரகசிய காதலன் கவுதம் கிட்ச்லுவை திருமணம் செய்து கொண்டார். தமிழ்ப் படங்களில் வளரும் நடிகையாக இருக்கும் கயல் ஆனந்தி. பரியேறும் பெரிமாள் படத்துக்கு பிறகு அவர் முன்னணி நடிகைகள் பட்டியலில் இடம்பிடிப்பார் என்று ரசிகர்களும், திரையுலகினரும் கருதி வந்த நிலையில் சமீபத்தில் தனது காதலனும் திரைப்பட உதவி இயக்குனருமான சாக்ரடீஸை மணந்தார். இதுபோல் இன்னும் எத்தனை சர்ப்ரைஸ் காத்திருக்கிறது என்பது காதல் ஜோடிகளுக்கே வெளிச்சம்.

Advertisement
மேலும் செய்திகள்
don-t-want-to-answer-idiots-nayanthara-kattam-on-the-red-tea-issue
முட்டாள்களுக்கு பதில் சொல்ல விரும்பவில்லை... செம்பருத்தி டீ விவகாரத்தில் நயன்தாரா காட்டம்
coming-to-film-promotion-3-lakhs-to-give-actress-aparnitha-over-game
பட புரமோஷனுக்கு வரனுமா? 3 லட்சம் தரணும்... நடிகை அபர்ணிதா ஓவர் ஆட்டம்... சுரேஷ் காமாட்சி காட்டம்
actress-varalakshmi-marriage
நடிகை வரலட்சுமி திருமணம்... சரத்குமார் அட்டகாச ஆட்டம்... தாய்லாந்தில் களை கட்டும் திருமணம்
director-vasanthabalan-tested-covid-positive
கொரோனா தொற்று உறுதி – மருத்துவமனையில் இயக்குநர் வசந்தபாலன் அனுமதி
ratchasan-2-part-is-on-the-way
ராட்சசன் 2வது பாகம் தயார்.. விஷ்ணு விஷால் இன்ப அதிர்ச்சி..!
deepika-padukone-tests-positive-for-covid-19
நடிகை தீபிக படுகோனுக்கு என்ன ஆச்சு? – ரசிகர்கள் கலக்கம்!
priya-bhavani-shankar-hits-back-to-the-trolls
சீட்ட தூக்கிட்டு நில்லுன்னு அர்த்தமில்ல – பிரியா பவானி சங்கரின் மிரட்டல் அடி!
pia-bajpai-brother-passes-away-due-to-covid-19
மருத்துவ உதவி கேட்டு அலைந்த பிரபல நடிகைக்கு நிகழ்ந்த சோகம்!
arrahman-congrats-to-stalin
ஏ.ஆர்.ரஹ்மான் போட்ட ட்வீட்.. உடனே ரிப்ளே செய்த ஸ்டாலின் – வைரலாகும் பதிவு!
rashmika-mandanna-says-rcb-is-her-favourite-team-gone-viral
ஐபிஎல் அணி குறித்து நடிகை ராஷ்மிகா என்ன சொன்னார் தெரியுமா?

READ MORE ABOUT :

/body>