நடிகரை ஸ்கூட்டரில் டபுள்ஸ் அடித்த நடிகை.. மும்பையில் பரபரப்பு..

நடிகை சார்மியை ஞாபகமிருக்கிறதா? இயக்குனர் டி.ராஜேந்தரின் காதல் அழிவதில்லை படம் மூலம் தமிழில் அறிமுகமானவர். காதல் கிசு கிசு, ஆஹா எத்தனை அழகு என ஒரு சில தமிழ் படங்களில் நடித்தார். பின்னர் தெலுங்கில் நடிக்கச் சென்று பிஸியான நடிகை ஆனார். அப்போது அவருக்கு இயக்குனர் புரி ஜெகநாத்துடன் நட்பு மலர்ந்தது, இப்போது வரை அவர்களின் நட்பு நெருக்கமாகத் தொடர்கிறது. பிஸ்னஸ் பார்ட்னராகவும் உள்ளனர்.சார்மி தற்போது லைகர் என்ற படத்தைத் தயாரிக்கிறார். புரி ஜெகநாத் இயக்குகிறார். இதில் விஜய தேவரகொண்டா ஹீரோவாக நடிக்கிறார். அதிரடி ஆக்‌ஷன் படமாக உருவாகும் இதற்காக கடுமையான பயிற்சிகள் மேற்கொண்டு சிக்ஸ்பேக் தோற்றத்துக்கு விஜய தேவரகொண்டா மாறினார்.

இப்படத்தின் படப் பிடிப்பு மும்பையில் நடந்தது. படப்பிடிப்பு இடைவேளையில் சார்மி அங்கிருந்த ஒரு ஸ்கூட்டரை எடுத்து வந்தார். விஜய் தேவரகொண்டாவிடம் சென்று பின்னால் அமரும்படி கூற அவரும் ஏறி அமர்ந்தார். அடுத்த நொடி படப்பிடிப்பு தளத்திலிருந்து ஸ்கூட்டரில் பறந்துவிட்டார் சார்மி. மும்பை வீதிகளில் விஜய தேவரகொண்டாவை பின்னால் அமர்த்திக்கொண்டு ஜாலி ரெய்டு சென்றார் சார்மி. விஜய் தேவரகொண்டா முககவசம் அணிந்திருந்தார். சார்மி கூலிங்கிளாஸ் மட்டும் அணிந்திருந்ததால் ஒரு சில ரசிகர்கள் அவரை அடையாளம் கண்டு கொண்டு கையசைத்து ஹாய் கூறினர்.

இதுபற்றிய படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட சார்மி,நீங்களே பார்ப்பதுபோல் விஜய் தேவரகொண்டா என் மீது அதிக நம்பிக்கை வைத்திருக்கிறார் என்று கமெண்ட் பகிர்ந்தார்.
விஜய தேவர கொண்டாவை சார்மி ஸ்கூட்டரில் ஏற்றிச் செல்வதை இயக்குனர் புரி ஜெகநாத் ஓரமாக நின்று வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார்.விஜய் தேவரகொண்டா ஏற்கனவே நடித்த அர்ஜூன் ரெட்டி, கீதா கோவிந்தம், டியர் காம்ரேட் போன்ற படங்கள் அவரை காதல் நாயகனாக ரசிகர்கள் மத்தியில் பதிய வைத்தது. ஏராளமான இளம் ரசிகைகளும் அவருக்கு உள்ளனர். ஆக்‌ஷன் ஹீரோ ஆக வேண்டும் என்ற கனவில் இருந்தார் விஜயதேவர கொண்டா. அதற்கேற்ப ஆக்‌ஷன் பட இயக்குனர் புரி ஜெகநாத் அதிரடி ஆக்‌ஷனு டன் கூடிய லைகர் பட கதையைக் கூற அவருக்குப் பிடித்துவிட்டது. உடனடியாக நடிக்க ஒப்புக்கொண்டார். விஜயதேவரகொண்டாவின் காதல் ரோமியோ இமேஜை லைகர் படம் ஆக்‌ஷன் ஹீரோவாக மாற்றுமா என்பது சீக்கிரம் தெரிந்துவிடும்.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
don-t-want-to-answer-idiots-nayanthara-kattam-on-the-red-tea-issue
முட்டாள்களுக்கு பதில் சொல்ல விரும்பவில்லை... செம்பருத்தி டீ விவகாரத்தில் நயன்தாரா காட்டம்
coming-to-film-promotion-3-lakhs-to-give-actress-aparnitha-over-game
பட புரமோஷனுக்கு வரனுமா? 3 லட்சம் தரணும்... நடிகை அபர்ணிதா ஓவர் ஆட்டம்... சுரேஷ் காமாட்சி காட்டம்
actress-varalakshmi-marriage
நடிகை வரலட்சுமி திருமணம்... சரத்குமார் அட்டகாச ஆட்டம்... தாய்லாந்தில் களை கட்டும் திருமணம்
director-vasanthabalan-tested-covid-positive
கொரோனா தொற்று உறுதி – மருத்துவமனையில் இயக்குநர் வசந்தபாலன் அனுமதி
ratchasan-2-part-is-on-the-way
ராட்சசன் 2வது பாகம் தயார்.. விஷ்ணு விஷால் இன்ப அதிர்ச்சி..!
deepika-padukone-tests-positive-for-covid-19
நடிகை தீபிக படுகோனுக்கு என்ன ஆச்சு? – ரசிகர்கள் கலக்கம்!
priya-bhavani-shankar-hits-back-to-the-trolls
சீட்ட தூக்கிட்டு நில்லுன்னு அர்த்தமில்ல – பிரியா பவானி சங்கரின் மிரட்டல் அடி!
pia-bajpai-brother-passes-away-due-to-covid-19
மருத்துவ உதவி கேட்டு அலைந்த பிரபல நடிகைக்கு நிகழ்ந்த சோகம்!
arrahman-congrats-to-stalin
ஏ.ஆர்.ரஹ்மான் போட்ட ட்வீட்.. உடனே ரிப்ளே செய்த ஸ்டாலின் – வைரலாகும் பதிவு!
rashmika-mandanna-says-rcb-is-her-favourite-team-gone-viral
ஐபிஎல் அணி குறித்து நடிகை ராஷ்மிகா என்ன சொன்னார் தெரியுமா?
Tag Clouds

READ MORE ABOUT :