தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க செயலாளர் திடீர் ராஜினாமா

by Balaji, Feb 21, 2021, 19:45 PM IST

தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க செயலாளர் பொறுப்பிலிருந்து திருப்பதி பிரதர்ஸ் நிறுவன அதிபர் என். சுபாஷ் சந்திரபோஸ் திடீரென ராஜினாமா செய்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது: தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைமை மற்றும் உறுப்பினர்களுக்கு வணக்கம். ஒரு செயலாளராக நமது சங்கத்தில் நான் இணைத்துக்கொண்டு பணியாற்றி வருகிறேன்.

சில முடிவுகளை தலைமை ஒரு செயலாளராக இருக்கும் என்னை ஆலோசிக்காமல் எடுக்கும் முடிவுகள் எனக்கு மிகவும் வருத்தத்தை ஏற்படுத்துகிறது. ஆகையால் தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் தற்போது நான் வகித்து வரும் செயலாளர் பதவியை ராஜினமா செய்கிறேன் என்பதை மிகவும் வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

You'r reading தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க செயலாளர் திடீர் ராஜினாமா Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை