கோவை முகாமில் யானைகள் சித்திரவதை..?

மேட்டுப்பாளையத்தில் நடக்கும் யானைகள் சிறப்பு முகாமில் யானைகள் சித்திரவதை செய்யப்படுவதாக சமூக வலைத்தளங்களில் வெளியான வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. கோவை அருகே மேட்டுப்பாளையத்தில் யானைகள் சிறப்பு நலவாழ்வு முகாம் தேக்கம் பட்டியில் நடைப்பெற்று வருகிறது. இதில் தமிழகம் முழுவதும் 26 கோவில்களிலிருந்து யானைகள் பங்கேற்றுள்ளன.

இந்நிலையில் இம் முகாமில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர்கோவில் யானை ஜெய்மால்யதாவை அதன் பாகன்கள் இருவர் கடுமையாக தாக்கும் காட்சி சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. தாக்குதல் தாங்காமல் யானை பிளிறும் ஓசையும் அதில் இடம் பெற்றுள்ளது.
எதற்காக இந்த யானையை பாகன்கள் தாக்கினார்கள் என்பது தெரியவில்லை. புத்துணர்வு முகாமில் நடைப்பெற்ற இந்த சம்பவம் மன ரீதியா பாதிப்பை ஏற்படுத்தி வருவதால் அரசு உரிய விளக்கமும், நடவடிக்கையும் எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

READ MORE ABOUT :