தளபதி நடிகர் விஜய் நடித்த தெறி, மெர்சல், பிகில் என 3 படங்களை அடுத்தடுத்து இயக்கினார் அட்லீ. இப்படங்கள் சூப்பர் ஹிட் படங்களாக அமைந்தன. பிகில் படம் ஓடிக்கொண்டிருந்த நிலையிலேயே அப்படத்தின் 2ம் பாகம் உருவாக்கும் எண்ணம் இருப்பதாக அட்லீ தெரிவித்திருந்தார். இதற்கிடையில் விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தனது 64வது படமாக மாஸ்டர் படத்தில் நடித்தார். இதில் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கிறார். மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். கடந்த ஏப்ரல் மாதமே இப்படம் வெளியாகவிருந்தது. கொரோனா ஊரடங்கால் படம் ரிலீஸ் ஆவதில் தாமதம் ஏற்பட்டது.
இதனால் அட்லி இந்தியில் நடிகர் ஷாருக்கான நடிக்கும் ஆக்ஷன் படத்தை இயக்க ஒப்புக்கொண்டிருக்கிறார். வெளிநாடுகளில் இதன் படப்பிடிப்பு நடக்க உள்ளது. இப்படத்தின் படப்பிடிப்புக்கான முன்னேற்பாடுகள் நடந்து வருகிறது. வரும் ஆகஸ்ட் மாதம் முதல் ஷாருக்கானின் படப்பிடிப்பை துவங்குகிறார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில், அட்லீ தற்போது மும்பையிலுள்ள பிரபல Aalim Hakim பியூட்டி சலூனில் ஸ்பைக் கெட்டப்பில் ஹேர் ஸ்டைலை மாற்றிஸ்டைலாக மாறியுள்ளார். அட்லீயா இது?... ஆசம் அட்லி என்று நெட்டிசன்கள் இந்தப் புகைப்படங்களை வைரலாக்கி வருகின்றனர். இந்தப் புது கெட்டப் தற்போது பேசு பொருளாகியுள்ளது.