சிறுத்தை சிவா அண்ணாத்த திரைப்படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் முன்னணி நடிகைகள் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் ,குஷ்பு, மீனா, நடிகர்கள் பிரகாஷ்ராஜ், சூரி, சதீஷ் என ஏராளமானோர் நடிக்கின்றனர். ஹைதரபாத்தில் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தபோது, படப்பிடிப்பு குழுவைச் சேர்ந்த 4 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டது.
கொரோனா வைரஸ் பிரச்சனையால் பல மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்ட அண்ணாத்த படப்பிடிப்பு சென்னையில் இருக்கும் கோகுலம் ஸ்டுடியோஸில் செட் போட்டு படப்பிடிப்பை நடத்தி வந்தனர். தற்போது படப்பிடிப்புக்காக ஹைதராபாத் பறந்துள்ளார் நடிகர் ரஜினி.
சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு டி இமான் இசையமைக்கிறார். இப்படத்தை இந்தாண்டு தீபாவளிக்கு வெளியிட உள்ளதாக ஏற்கனவே அதிகாரப்பூர்வமாக அறிவித்து விட்டனர்.
இந்நிலையில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிக்கும் விக்ரம் படமும் இந்தாண்டு தீபாவளிக்கு வெளியிடப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. விக்ரம் படத்தை கமல் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் மூலம் தயாரிக்கிறார்.
இப்படத்தில் பஹத் பாசில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். அண்மையில் படத்தின் டீஸர் வெளியாகி ஹிட் அடித்தது. இந்த படத்தின் படப்பிடிப்பை ஒரேகட்டமாக நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது. படத்தின் படப்பிடிப்பு அப்படி ஒரேகட்டமாக முடியும் பட்சத்தில், விக்ரம் படம் இந்த தீபாவளிக்கு திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நீண்ட நாட்களுக்குப்பிறகஉ ரஜினி, கமல் படங்கள் ஒரே நாளில் வெளியாகும் வாய்ப்பிருந்தால் அது அவரது ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்டாகவும் அமையும். இதுபோல கடந்த 2005ம் ஆண்டு ரஜினியின் சந்திரமுகி திரைப்படும், கமலின் மும்பை எக்ஸ்பிரஸ் திரைப்படமும் ஒரே நாளில் வெளியானது குறிப்பிடத்தக்கது. மீண்டும் அது போன்ற ஒரு திருவிழாவுக்காக ரசிகர்கள் காத்துக்கொண்டிருக்கிறார்கள்.