ஆம் அது உண்மைதான் – சிவாங்கி குறித்து மனம் திறந்த அஸ்வின்!

Advertisement

விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி முடிவுக்கு வருவதையடுத்து, போட்டியாளர் அஸ்வின் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உணர்ச்சி பொங்க தனது கருத்தை பதிவிட்டுள்ளார்.


தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. குறிப்பாக சீசன் 1ஐ விட சீசன் 2 ஏகபோக வரவரேற்பை பெற்றிருக்கிறது. 'குக்கு வித் கோமாளி' சீசன் 2 நிகழ்ச்சி இந்த வார இறுதியில் முடிவடைகிறது. இந்த இறுதிப்போட்டியில் சிறப்பு விருந்தினராக நடிகர் சிம்பு கலந்துக் கொண்டிருக்கிறார். இந்நிகழ்ச்சியின் பங்கேற்பாளர்கள் ஒவ்வொருவரும், ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளனர்.

குறிப்பாக புகழ், சிவாங்கி மற்றும் அஸ்வின் ஆகியோர் இளைஞர்களிடம் நன்றாக ரீச் ஆகியிருக்கிறார்கள். சமூக வலைதளங்களில் அவர்களை பின் தொடர்பவர்களின் எண்ணிக்கையும் இரட்டிப்பாகியிருக்கிறது. இந்நிகழ்ச்சி நிறைவடைவது குறித்து போட்டியாளர்க்கள் பலரும் தங்கள் கருத்துகளை வெளிப்படுத்தியுள்ளனர்.

குறிப்பாக அஸ்வின் இன்ஸ்டாகிராமில் ஒரு நீண்ட உணர்வுப்பூர்வமான பதிவை வெளியிட்டுள்ளார்.அதில் "இது குக் வித் கோமாளி அல்ல, குக் வித் ஃபேமிலி. என்ன ஒரு அனுபவம்! இந்த பயணம் எனக்கு மிகவும் ஸ்பெஷலானது, என் நினைவுகளில் எப்போதும் பொதிந்திருக்கும். என்னைப் போன்றவர்கள் கனவு மட்டுமே காண முடியும் என்பதற்கான அங்கீகாரத்தை இந்நிகழ்ச்சி அளித்துள்ளது. நிகழ்ச்சி முடிந்துவிட்டது என்ற விதிமுறைக்கு நான் இன்னும் வரவில்லை.

எந்த நாளிலும், எந்த நேரத்திலும் நான் மற்ற எல்லா வேலைகளையும் விட்டுவிட்டு இந்த அணியுடன் ஒரு நிமிடமானாலும் செலவிட வருவேன். இதைவிட நான் என்ன கேட்க முடியும்! இணை போட்டியாளர்கள் & ஜோடிகள் எல்லோரும் மிகச் சிறப்பானவர்கள். கேமரா மேன் முதல் எடிட்டர்கள் வரை நடுவர்கள் முதல் இயக்குநர் மற்றும் சேனல் வரை எல்லோருக்கும் நன்றியும் வாழ்த்தும்” என்று தெரிவித்திருந்தார்.

மேலும் தனது ரசிகர்களுக்கு செய்தி வெளியிட்ட அஸ்வின், "இறுதியாக, நீங்கள் மிக மிக அற்புதமானவர்கள். அன்பின் அளவு, ஆதரவு மற்றும் மிக முக்கியமாக நீங்கள் எங்களுக்காக செலவழித்த நேரம், இதற்கெல்லாம் வெறுமனே வார்த்தைகள் போதாது. சல்யூட்! இந்த நிகழ்ச்சியின் ஒவ்வொரு போட்டியாளருக்கும் ஜோடிகளுக்கும் உங்கள் ஆதரவு என்றென்றும் தொடரும் என நம்புகிறேன்" என்றார்.

கடைசியாக சிவாங்கியை குறிப்பிட்ட அஸ்வின், ``நிச்சயமாக நமது சிவாங்கிக்கு ஒரு சிறப்பு குறிப்பு உண்டு. நீ தான் முதலில் என்னை கம்ஃபர்டபிளாக உணர வைத்தாய். என் வேடிக்கையான பக்கத்தை வெளியே கொண்டு வந்தாய். 'நீங்கள் என்னை மிஸ் செய்வீர்களா?' என்று கேட்டுக்கொண்டே இருந்தாய். அந்த கேள்விக்கு, ஆம்!! நீ மிகவும் மிஸ் செய்யப்படுவாய்” என்று அந்த பதிவில் எழுதியிருந்தார். அவருடைய இந்த பதிவு வைரலாகி வருகிறது.

Advertisement
மேலும் செய்திகள்
don-t-want-to-answer-idiots-nayanthara-kattam-on-the-red-tea-issue
முட்டாள்களுக்கு பதில் சொல்ல விரும்பவில்லை... செம்பருத்தி டீ விவகாரத்தில் நயன்தாரா காட்டம்
coming-to-film-promotion-3-lakhs-to-give-actress-aparnitha-over-game
பட புரமோஷனுக்கு வரனுமா? 3 லட்சம் தரணும்... நடிகை அபர்ணிதா ஓவர் ஆட்டம்... சுரேஷ் காமாட்சி காட்டம்
actress-varalakshmi-marriage
நடிகை வரலட்சுமி திருமணம்... சரத்குமார் அட்டகாச ஆட்டம்... தாய்லாந்தில் களை கட்டும் திருமணம்
director-vasanthabalan-tested-covid-positive
கொரோனா தொற்று உறுதி – மருத்துவமனையில் இயக்குநர் வசந்தபாலன் அனுமதி
ratchasan-2-part-is-on-the-way
ராட்சசன் 2வது பாகம் தயார்.. விஷ்ணு விஷால் இன்ப அதிர்ச்சி..!
deepika-padukone-tests-positive-for-covid-19
நடிகை தீபிக படுகோனுக்கு என்ன ஆச்சு? – ரசிகர்கள் கலக்கம்!
priya-bhavani-shankar-hits-back-to-the-trolls
சீட்ட தூக்கிட்டு நில்லுன்னு அர்த்தமில்ல – பிரியா பவானி சங்கரின் மிரட்டல் அடி!
pia-bajpai-brother-passes-away-due-to-covid-19
மருத்துவ உதவி கேட்டு அலைந்த பிரபல நடிகைக்கு நிகழ்ந்த சோகம்!
arrahman-congrats-to-stalin
ஏ.ஆர்.ரஹ்மான் போட்ட ட்வீட்.. உடனே ரிப்ளே செய்த ஸ்டாலின் – வைரலாகும் பதிவு!
rashmika-mandanna-says-rcb-is-her-favourite-team-gone-viral
ஐபிஎல் அணி குறித்து நடிகை ராஷ்மிகா என்ன சொன்னார் தெரியுமா?
/body>