நடிகர் யோகிபாபு மீது காவல்ஆணையர் அலுவலகத்தில் புகார் - என்ன காரணம்?

by Madhavan, Apr 10, 2021, 18:15 PM IST

முடி திருத்துவோரை மண்டேலா படத்தில் அவமதித்து விட்டதாக, யோகி பாபு உள்ளிட்ட படக்குழுவினர் மீது, சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் தெரிவிக்கப்பாட்டுள்ளது.

இயக்குநர் மடோன் அஷ்வின் இயக்கத்தில் யோகிபாபு நடிப்பில் வெளியான படம் மண்டேலா. இந்த படம் நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானது. படம் வெளியான சில நாட்களிலேயே பெரும் வரவேற்பை பெற்றது. விமர்சன ரீதியாக பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. படத்தில் ஷீலா ராஜ்குமார், சங்கிலி மருகன், ஜி.எம்.சுந்தர் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படம் பல்வேறு தரப்பினரிடம் பாராட்டுகளை பெற்றாலும், தற்போது சிக்கல் எழுந்துள்ளது.

மண்டேலா திரைப்படம் தொடர்பாக தமிழ்நாடு முடிதிருத்தும் தொழிலாளர் நலச்சங்கத்தினர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை கொடுத்துள்ளனர்.

அதில், ”நடிகர் யோகிபாபு நடித்துள்ள மண்டேலா என்ற திரைப்படம், சமீபத்தில் வெளியானது. அந்தப் படத்தில் முடிதிருத்தும் தொழிலாளர்களை புண்படுத்தும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது. படம் முழுவதும் இது போன்ற காட்சிகள் உள்ளன. முடிதிருத்தும் மற்றும் மருத்துவ சமுதாயத்தைச் சேர்ந்த 40 லட்சம் மக்களை இழிவுபடுத்தும் வகையில் எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனம், இயக்குனர் மற்றும் நடிகர் யோகிபாபு ஆகியோர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும்” என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

“ கிராமப்புறங்களில் எங்கள் தொழிலை செய்பவர்கள் பலரும் ஆதிக்க சாதிகளால் பல்வேறு வன்கொடுமைகளுக்கு ஆளாகி வருகின்றனர்” என திருச்சி மாவட்ட முடி திருத்துவோர் சங்கம் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு கொடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

You'r reading நடிகர் யோகிபாபு மீது காவல்ஆணையர் அலுவலகத்தில் புகார் - என்ன காரணம்? Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை