மாரி செல்வராஜின் புதிய படத்தில் துருவ் விக்ரமுக்கு என்ன கேரக்டர் தெரியுமா?

மாரிசெல்வராஜ் இயக்கும் புதிய படத்தில் துருவ் விக்ரமின் கேரக்டர் என்ன என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.


தமிழ்சினிமாவில் பரியேறும் பெருமாள் என்ற தனது முதல் படத்திலேயே அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர் மாரி செல்வராஜ். இதையடுத்து தனுஷை வைத்து அவர் இயக்கிய கர்ணன் திரைப்படம் ஏகபோக வரவேற்பை பெற்று வருகிறது. பலரும் இந்த படத்தை பாராட்டி வருகின்றனர்.

தாணு தயாரித்திருக்கும் கர்ணன் திரைப்படத்தில் தனுஷ், லால், ரஜிஷா விஜயன், யோகி பாபு, லட்சுமி ப்ரியா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையில் பாடல்கள் ஹிட் அடித்திருந்த நிலையில் ஏப்ரல் 9-ம் தேதி திரைக்கு வந்த கர்ணன் திரைப்படமும் மூன்று நாட்களில் ரூ.25 கோடி வரை வசூல் செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஒருபக்கம் வசூல் ரீதியாக வரவேற்பைப் பெற்றுள்ள இந்தப் படம் விமர்சன ரீதியாகவும் பலரது பாராட்டைப் பெற்று வருகிறது.அடுத்ததாக கர்ணன் படத்தை தொடர்ந்து மாரி செல்வராஜ் இயக்கும் புதிய படத்தில் துருவ் விக்ரம் நடிக்கிறார். இத்திரைப்படத்தை பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

முதல் இரண்டு படங்களிலிருந்து வித்தியாசப்படும் விதமாக கபடி வீரர் ஒருவரின் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி மாரி செல்வராஜ் தனது மூன்றாவது படத்தின் கதையை அமைத்துள்ளதாகவும் துருவ் விக்ரம் கபடி வீரராக நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

மாரி செல்வராஜ் படத்துக்கு முன்னதாக கார்த்திக் சுப்புராஜூடனும் கைகோர்த்துள்ளார் துருவ் விக்ரம். தனது தந்தையுடன் இணைந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சியான் 60 என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இத்திரைப்படத்தில் துருவ்வுக்கு ஜோடியாக வாணி போஜனும் விக்ரமுக்கு ஜோடியாக சிம்ரனும் நடிக்கிறார்கள். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தததும், அடுத்தாக மாரி செல்வராஜ் இயக்கும் புதிய படத்தில் நடிக்க இருக்கிறார் துருவ் விக்ரம்.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
actress-varalakshmi-marriage
நடிகை வரலட்சுமி திருமணம்... சரத்குமார் அட்டகாச ஆட்டம்... தாய்லாந்தில் களை கட்டும் திருமணம்
director-vasanthabalan-tested-covid-positive
கொரோனா தொற்று உறுதி – மருத்துவமனையில் இயக்குநர் வசந்தபாலன் அனுமதி
ratchasan-2-part-is-on-the-way
ராட்சசன் 2வது பாகம் தயார்.. விஷ்ணு விஷால் இன்ப அதிர்ச்சி..!
deepika-padukone-tests-positive-for-covid-19
நடிகை தீபிக படுகோனுக்கு என்ன ஆச்சு? – ரசிகர்கள் கலக்கம்!
priya-bhavani-shankar-hits-back-to-the-trolls
சீட்ட தூக்கிட்டு நில்லுன்னு அர்த்தமில்ல – பிரியா பவானி சங்கரின் மிரட்டல் அடி!
pia-bajpai-brother-passes-away-due-to-covid-19
மருத்துவ உதவி கேட்டு அலைந்த பிரபல நடிகைக்கு நிகழ்ந்த சோகம்!
arrahman-congrats-to-stalin
ஏ.ஆர்.ரஹ்மான் போட்ட ட்வீட்.. உடனே ரிப்ளே செய்த ஸ்டாலின் – வைரலாகும் பதிவு!
rashmika-mandanna-says-rcb-is-her-favourite-team-gone-viral
ஐபிஎல் அணி குறித்து நடிகை ராஷ்மிகா என்ன சொன்னார் தெரியுமா?
actor-sivakarthikeyan-birthday-wishes-to-ajith
அஜித்துக்கு இப்படியொரு பிறந்தநாள் வாழ்த்து – சிவகார்த்திகேயனை பாராட்டும் ரசிகர்கள்!
actor-surya-statement-regarding-director-kv-anand-dead
ஒரு போர்களத்தில் நிற்பதை போல உணர்ந்தேன் – நினைவுகளை பகிரும் நடிகர் சூர்யா!
Tag Clouds