அஸ்வின் நடிக்கும் படத்தில் இவரும் நடிக்கிறார் – ரசிகர்கள் உற்சாகம்!

குக்வித் கோமாளி பிரபலம் அஸ்வின் படம் ஒன்றில் கதாநாயகனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். அவரது படத்தில் குக்வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்ற மற்றவரும் நடிக்க இருக்கிறார்.

குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் இரண்ட சீசன்களும் சக்கை போடு போட்டது. இதற்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள் .நேற்றுடன் இரண்டாவது சீசன் நிறைவடைந்திருக்கும் நிலையில் கனி வெற்றியாளரானார். சமையல் நிகழ்ச்சி என்றாலும் நகைச்சுவைக்கு பஞ்சமில்லாமல் ரசிகர்களை மகிழ்வித்ததில்புகழ், ஷிவாங்கி உள்ளிட்ட இந்நிகழ்ச்சியின் கோமாளிகளுக்கு பெரும் பங்கு இருக்கிறது.

இந்நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான புகழ் பல முன்னணி நடிகர்களின் படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்து வருகிறார். அதேபோல் ஷிவாங்கி சிவகார்த்திகேயன் உடன் டான் படத்தில் நடித்து வருகிறார். அதேபோல் பவித்ராவும் ஏஜிஎஸ் என்டர்டெயின்மெண்ட் தயாரிக்கும் புதிய படத்தில் சதீஷூக்கு ஜோடியாக நடித்து திரைப்பட நாயகியாக உள்ளார். அந்த வரிசையில் தற்போது அஸ்வினும் இணைந்துள்ளார்.

இசை ஆல்பங்களில் நடிந்து வந்த அஸ்வின் தற்போது சினிமா உலகத்துக்குள் காலடி எடுத்து வைக்கிறார். டிரைடண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகிறார். அறிமுக இயக்குநர் ஹரி இயக்கத்தில் உருவாக இருக்கும் இந்தப் படம் காதல் மற்றும் காமெடியை மையப்படுத்தி உருவாகிறது.

இதில் மற்றொரு விஷயம் என்னவென்றால் இந்த படத்தின் காமெடி கேரக்டரில் நடிக்க இருக்கிறார் புகழ். இந்தப் படம் புகழ் கேரியரில் மிக முக்கியமான படமாக இருக்கும் என்று இயக்குநர் ஹரி தெரிவித்துள்ளார். மற்ற நடிகர், நடிகைகளின் தேர்வு நடைபெற்று வரும் நிலையில் மே மாதம் இறுதியில் ஷூட்டிங் துவங்க உள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.

இவ்வளவு காலம் சினிமாவில் ஹீரோவாக நடிக்க வேண்டும் என்ற தனது கனவு நிறைவேறியிருப்பதாக அஸ்வின் வீடியோ ஒன்றில் தெரிவித்துள்ளார்.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
actress-varalakshmi-marriage
நடிகை வரலட்சுமி திருமணம்... சரத்குமார் அட்டகாச ஆட்டம்... தாய்லாந்தில் களை கட்டும் திருமணம்
director-vasanthabalan-tested-covid-positive
கொரோனா தொற்று உறுதி – மருத்துவமனையில் இயக்குநர் வசந்தபாலன் அனுமதி
ratchasan-2-part-is-on-the-way
ராட்சசன் 2வது பாகம் தயார்.. விஷ்ணு விஷால் இன்ப அதிர்ச்சி..!
deepika-padukone-tests-positive-for-covid-19
நடிகை தீபிக படுகோனுக்கு என்ன ஆச்சு? – ரசிகர்கள் கலக்கம்!
priya-bhavani-shankar-hits-back-to-the-trolls
சீட்ட தூக்கிட்டு நில்லுன்னு அர்த்தமில்ல – பிரியா பவானி சங்கரின் மிரட்டல் அடி!
pia-bajpai-brother-passes-away-due-to-covid-19
மருத்துவ உதவி கேட்டு அலைந்த பிரபல நடிகைக்கு நிகழ்ந்த சோகம்!
arrahman-congrats-to-stalin
ஏ.ஆர்.ரஹ்மான் போட்ட ட்வீட்.. உடனே ரிப்ளே செய்த ஸ்டாலின் – வைரலாகும் பதிவு!
rashmika-mandanna-says-rcb-is-her-favourite-team-gone-viral
ஐபிஎல் அணி குறித்து நடிகை ராஷ்மிகா என்ன சொன்னார் தெரியுமா?
actor-sivakarthikeyan-birthday-wishes-to-ajith
அஜித்துக்கு இப்படியொரு பிறந்தநாள் வாழ்த்து – சிவகார்த்திகேயனை பாராட்டும் ரசிகர்கள்!
actor-surya-statement-regarding-director-kv-anand-dead
ஒரு போர்களத்தில் நிற்பதை போல உணர்ந்தேன் – நினைவுகளை பகிரும் நடிகர் சூர்யா!
Tag Clouds