மைக்கேல் ராயப்பனின் புகாருக்கு சிம்பு நாளை பதில் சொல்வார்

by Nabil, Dec 5, 2017, 13:35 PM IST

விடிவி கணேஷ் தயாரிப்பில் சேதுராமன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் `சக்க போடு போடு ராஜா' இதில் சந்தானம், வைபவி சாண்டில்யா முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

Simbu 

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நாளை நடைபெற  உள்ளது, வருகிற டிசம்பர் 22-ஆம் தேதி படம் வெளியாக உள்ளது.

படக்குழுவினருடனான பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது. இதில் நடிகர் சந்தானம் பேசும்போது, “சிவகார்த்திகேயனுக்கு நான் போட்டியில்லை, போட்டியாக இருந்தாலும் அது ஆரோக்கியமாகத் தான் இருக்கும்.

தற்போதைய சூழ்நிலையில் சிவகார்த்திகேயனின் ‘வேலைக்காரன்’ படத்திற்கு தான் ‘சக்க போடு போடு ராஜா’ படம் போட்டியாக இருக்கும் என்றார். விவேக், ரோபோ சங்கர், விடிவி கணேஷ், மயில்சாமி, பவர் ஸ்டார் சீனிவாசன் என 5 காமெடியன்கள் சேர்ந்த நடித்திருக்கும் இந்த படம் முழு காமெடி விருந்தாகவே இருக்கும். 

தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பனின் விமர்சனத்துக்கு நாளை நடைபெறும் `சக்க போடு போடு ராஜா' இசை வெளியீட்டு விழாவில் நடிகர் சிம்பு பதில் அளிப்பார்.

You'r reading மைக்கேல் ராயப்பனின் புகாருக்கு சிம்பு நாளை பதில் சொல்வார் Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை