அனுஷ்காவை விவாகரத்து செய்யுங்கள் விராட்.. ரசிகர்கள் வேண்டுகோள்

May 4, 2018, 13:02 PM IST

அனுஷ்கா ஒரு ராசி இல்லாதவர்.. அவரை விவாகரத்து செய்துவிடுங்கள் என்று ரசிகர்கள் விராட் கோஹ்லிக்கு கோரிக்கை விடுத்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஐபிஎல் டி20 போட்டி கடந்த ஏப்ரல் மாதம் 7ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. பெங்களூரு அணியின் கேப்டனாக விராட் கோஹ்லி விளையாடி வருகிறார். பெங்களூர் ஆணி தொடர்ந்து தோல்வியை சந்தித்து வருவதால் விராட்டின் ரசிகர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் சென்னை & பெங்களூரு அணிக்கு இடையே நடைபெற்ற போட்டியில் பெங்களூரு அணி தோல்வியடைந்தது. அந்த போட்டியை காண விராட் கோஹ்லியின் மனைவியும் பலிவுட்டின் முன்னணி நடிகையான அனுஷ்கா சர்மா வந்திருந்தார். அனுஷ்கா வந்ததால் தான் பெங்களூரு அணி தோல்வி அடைந்தது. இனி, தயவு செய்து போட்டியை காண வராதீர்கள்.

அனுஷ்கா ஒரு ராசி இல்லாதவர். அவரை விவாகரத்து செய்துவிடுங்கள் என்று ரசிகர்கள் பலர் ட்விட்டரில் கருத்து தெரிவித்திருந்தனர். ரசிகர்களின் ட்வீட்டால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

You'r reading அனுஷ்காவை விவாகரத்து செய்யுங்கள் விராட்.. ரசிகர்கள் வேண்டுகோள் Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை