யாருய்யா அந்த ஜூரி..?- தேசிய விருது விவகாரத்தில் ரசூல் பூக்குட்டி ஆவேசம்!

by Rahini A, May 6, 2018, 15:43 PM IST

சினிமா கலைஞர்களைக் கவுரவிக்கும் வகையில் நாட்டின் 65-வது தேசிய சினிமா விருதுகள் வழங்கும் விழா டெல்லியில் சமீபத்தில் நடைபெற்றது.

65-வது தேசிய சினிமா விருதுகள் விழாவில் 65 ஆண்டு காலமாக இல்லாத வழக்கமாக விருது பெறவுள்ள வெற்றியாளர்களில் 11 பேருக்கு மட்டுமே ஜனாதிபதி விருது அளிப்பார் என அறிவிக்கப்பட்டது.

நாடு முழுவதுமிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 137 வெற்றியாளர்களிலிருந்து வெறும் 11 பேருக்கு மட்டுமே விருது ஜனாதிபதி கையால் அளிக்கப்பட்டது. மேலும், மீதமுள்ள வெற்றியாளர்களுக்கு மத்திய தகவல் தொடர்புத்துறை அமைச்சர் ஸ்மிருதி இராணி விருது வழங்கினார். 

இதையடுத்து, தேசிய விருது வெற்றியாளர்களில் பலர் இச்செய்தியால் மிகுந்த அதிருப்தி அடைந்தனர். இதையடுத்து வரலாறுகளில் இல்லாத வழக்கமாக நேற்று விழா சபை காலியாகவே கிடந்தது. குறிப்பாக தென்னிந்திய கலைஞர்கள் அதிகமானோர் இவ்விழாவை புறக்கணித்தனர்.

இந்நிலையில், கடந்த இரண்டு நாள்களாக இசை வடிவமைப்பாளரும் ஆஸ்கர் விருது பெற்றவருமான ரசூல் பூக்குட்டி தேசிய விருது தொடர்பான தனது அதிருப்தியை வெளிப்படுத்தி வந்தார்.

ஆனால், மூன்று நாள்களாகியும் இன்னும் அவர் விருது விழாவில் நடந்த அநியாயத்தைத் தட்டிக் கேட்பதை நிறுத்துவதாகத் தெரியவில்லை. தன் ட்விட்டர் பக்கத்தில், “இசை வடிவமைப்பு குறித்து ஏதாவது தெரிந்திருப்பவர்கள் விருது வழங்கும் ஜூரியில் இருந்தார்களா” என்று சிறந்த இசை வடிவமைக்கான விருது இம்முறை மல்லிக்கா தாஸுக்கு வழங்கப்பட்டதுக்கு தனது அதிருப்தியை தெரிவித்துள்ளார்.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

You'r reading யாருய்யா அந்த ஜூரி..?- தேசிய விருது விவகாரத்தில் ரசூல் பூக்குட்டி ஆவேசம்! Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை