”ரானுவ வீரர்களின் உணர்வோடு நடிகர் அக்ஷய் குமாரும் அவரது மனைவி டிவிங்கிள் கண்ணாவும் விளையாடியுள்ளார்கள்” என ராணுவ வீரர்கள் பத்தொன்பது பேர் அக்ஷய் எதிராக நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.
நடிகர் அக்ஷய் குமார் நடிப்பில் பல விருதுகளை அள்ளிய பாலிவுட் திரைப்படம் ‘ரஸ்டம்’. இத்திரைப்படத்தில் ஒரு கடற்படை அதிகாரியாக நடிகர் அக்ஷய் குமார் நடித்திருப்பார். அத்திரைப்படத்தில் அவர் அணிந்திருந்த சீருடையை ஏலம் விடுவதாக அவரது மனைவி டிவிங்கிள் கண்ணா அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.
அதாவது, ‘அக்ஷய் குமார் அணிந்திருந்த கடற்படையின் ஒரிஜினல் சீருடை’ என்ற அறிவிப்புடன் வெளியாகியிருந்தது ஏல அறிவிப்பு. இந்திய ராணுவ பிரிவான கடற்படையின் சீருடையை நடிகர் ஒருவர் அணிந்திருந்தாலும் எப்படி அது ஒரிஜினல் என அறிவிக்கப்படலாம் என்ற கேள்வி முதலில் எழுந்தது.
இதையடுத்து, இது ராணுவத்தை அவமதிக்கும் வகையிலும் ராணுவ வீரர்களின் உணர்வுகலை சீண்டுவது போல் இருப்பதாகவும் நடிகர் அக்ஷய் குமார் மற்றும் அவரது மனைவி டிவிங்கிள் கண்ணா ஆகியோர் மீது ராணுவ வீரர்கள், ஓய்வுபெற்ற வீரர்கள் என இதுவரையில் 19 பேர் அவர்களுக்கு எதிராக நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.
இதுகுறித்து டிவிங்கிள் கண்ணா கூறுகையில், “ஒரு நல்ல காரணத்துக்குப் பயனளிக்கும் வகையிலேயே எந்த ஏல அறிவிப்பு வெளியானது. மற்றதை சட்டப்படிதான் சந்திக்க வேண்டும்” என்றார்.