தர லோக்கல் ஹாப்பி பர்த்டே சாய் பல்லவி: மாரி 2வின் கொண்டாட்டம்

May 11, 2018, 14:39 PM IST

மலையாளத்தில் வெளியான ப்ரேமம் திரைப்படம் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை சாய் பல்லவி. இந்த படத்திற்கு பிறகு, தெலுங்கு, தமிழ், மலையாளம் படங்களில் நடிக்க சாய் பல்லவிக்கு தொடர்ந்து வாய்ப்புகள் குவிந்து வருகிறது.

இந்நிலையில், இவர் தமிழில் நடித்து வெளியான முதல் திரைப்படம் தியா. கடந்த மாத இறுதியில் வெளியான இந்த படம் சுமாரான விமர்சனங்களையே பெற்று வருகிறது. தியாவை தொடர்ந்து, சாய் பல்லவி அடுத்து தனுஷுடன் மாரி-2 படத்தில் நடித்து வருகிறார்.

படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வந்த வேளையில் படத்தின் நாயகியான சாய் பல்லவிக்கு பிறந்த நாள் என்று அறிந்த படக்குழுவினர் சர்பிரைஸ் கொடுத்தனர். சாய் பல்லவிக்கு பிடித்த வெள்ளை நிற உடை அணிந்த படக்குழுவினர் கேக் வெட்ட வைத்து கொண்டாடினர்.

"தர-லோக்கல் ஹாப்பி பர்த்டே" என்று அந்த கேக்கில் எழுதப்பட்டு இருந்தது. சாய் பல்லவி படக்குழுவினருடன் கேக் வெட்டும் புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

You'r reading தர லோக்கல் ஹாப்பி பர்த்டே சாய் பல்லவி: மாரி 2வின் கொண்டாட்டம் Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை