ஐஸ்வர்யா ராயின் எல்.கே.ஜி க்ரூப் போட்டோ- வைரலாகும் புகைப்படம்!

by Rahini A, May 21, 2018, 17:24 PM IST

நடிகை ஐஸ்வர்யா ராயின் எல்.கே.ஜி மற்றும் ஒன்றாம் வகுப்பு ‘க்ரூப் போட்டோ’ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

உலகத்துக்கு முன்னாள் என்றாலும் இந்தியாவுக்கு எந்நாளும் உலக அழகியாகத் தெரியும் ஒரே நபர் ஐஸ்வர்யா ராய். பாலிவுட் சூப்பர் ஹிட் நடிகையான ஐஸ்வர்யா ராய் கடந்த சில நாள்களுக்கு முன்னர் தான் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிமுகமானார்.

ஆரமத்திலிருந்து அசத்தலான புகைப்படங்களையும் தன்னுடைய கேன்ஸ் திருவிழா புகைப்படங்களைய்டும் பதிவிட்டு வந்த நடிகை ஐஸ்வர்யா ராய், தற்போது தனது பள்ளியில் தான் எல்.கே.ஜி மற்றும் ஒன்றாம் வகுப்பு படிக்கையில் எடுத்த க்ரூப் போட்டோக்களை பகிர்ந்துள்ளார்.

அதில், “எல்.கே.ஜி காலம்” மற்றும் “ஒன்றாம் வகுப்பு...ஆராத்யாவின் வயதில்” என இரண்டு புகைப்படங்களைப் பதிவிட்டுள்ளார். அப்புகைப்படங்களில் தான் எங்கிருக்கிறேன் என்பதை வெளியிடாத ஐஸ்வர்யா ராய் ரசிகர்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளார்.

ஐஸ்வர்யா ராயைக் கண்டுபிடிக்கவே படாதபடும் ரசிகர்கள் அவரது புகைப்படத்தை சமூக வலைதளங்களில் வைரல் ஆக்கியுள்ளனர்.

உங்களால் முடிந்தால் கண்டுபிடியுங்களேன்..?

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

You'r reading ஐஸ்வர்யா ராயின் எல்.கே.ஜி க்ரூப் போட்டோ- வைரலாகும் புகைப்படம்! Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை