ஐபிஎல் நிறைவு விழாவில் ரஜினியின் 2.0 டீசர் வெளியீடு?

by Rahini A, May 22, 2018, 16:59 PM IST

இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகளின் நிறைவு விழாவில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் ‘2.0’ திரைப்படத்தின் டீசர் வெளியாகலாம் எனக் கூறப்படுகிறது.

தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஸ்டிரைக்கில் ஈடுபட்டது. இந்தக் காலகட்டத்தில் எந்தவொரு தமிழ் திரைப்படமும் வெளியிடப்படவில்லை. தமிழ் சினிமா வரலாற்றிலேயே தமிழ் புத்தாண்டு அன்று ஒரு திரைப்படமும் வெளியாகமல் இருந்ததும் இந்த ஆண்டுதான்.

இந்த ஸ்டிரைக்கால் பல முக்கியத் திரைப்படங்களின் ரிலீஸ் தேதிகள் தள்ளிப் போனது. குறிப்பாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த நடித்துள்ள இரண்டு திரைப்படங்களான `காலா’ மற்றும் `2.0’ ரிலீஸுக்குத் தயாராக இருந்தும் வெளியிடப்படாமல் தள்ளிப்போடப்பட்டது.

ஆனால், தற்போது காலா ஜூன் மாதம் 27-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, இந்த ஆண்டு சுதந்திர தினத்தன்று 2.0 ரிலீஸ் ஆகலாம் என்று அப்படக்குழுவினர் தெரிவித்திருந்தனர். 

இந்நிலையில், 2.0 திரைப்படத்தின் டீசரை இயக்குநர் சங்கர் ஸ்டைலில் மிகப் பிரம்மாண்டமாக ஐபிஎல் போட்டியின் நிறைவு விழாவின் போது வெளியிடலாம் எனப் படக்குழுவினர் கலந்தாலோசித்து வருகின்றனராம்.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

You'r reading ஐபிஎல் நிறைவு விழாவில் ரஜினியின் 2.0 டீசர் வெளியீடு? Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை