தூத்துக்குடியில் போராட்டக்காரர்கள் மீது நடத்திய துப்பாக்குச்சூக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் ஸ்டெர்லைட் ஆலை உரிமையாளரின் உருவ பொம்மையை எரித்து போராட்டம் நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்ற கலவரத்தில் இதுவரை 8 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், பலரது நிலையை கவலைக்கிடமாக உள்ளது. பதற்றமான சூழல் நிலவி வருவதால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், போராட்டக்காரர்கள் மீது போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் இயக்குனர் கவுதமன் தலைமையில் போராட்டம் நடைபெற்றது. இதில், ஸ்டெர்லைட் ஆலையின் உரிமையாளர் உருவ பொம்யைமை எரித்து அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும், இன்று மாலை 6 மணிக்குள் ஸ்டெர்லைட் ஆலையை மூடப்படும என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை என்றால் நாளை மாணவர்கள் எழுச்சி போராட்டம் நடைபெறும் என கவுதமன் எச்சரிக்கை விடுத்துள்ளார். செந்த மக்களை சுட்டுக்கொள்வதற்கு பெயர் அரசா ? என்றும் இலங்கை அரசுக்கும் தமிழக அரசுக்கும் என்ன வித்தியாசம் உள்ளது என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com