இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் படம் எந்திரன் 2.0. ஏற்கனவே 2010ம் ஆண்டில் வெளியான எந்திரன் திரைப்படம் மெகா ஹிட் ஆனது. இந்நிலையில் ஷங்கர் அதன் இரண்டாம் பாகம் எடுக்க திட்டமிட்டு அதற்கான பணிகளை துவங்கி, இன்று அனைத்து காட்சிகளும் படமாக்கப்பட்டு, க்ராபிக்ஸ் வேலைகள் நடந்து வருகிறது.
ஏற்கனவே இரண்டு முறை படத்தின் ரிலீஸ் தேதிகளை மாற்றினார்கள். கடந்த மாதம் இறுதியில் கூட படத்தின் ரிலீஸ் தேதியை ஜனவரி மாதம் தள்ளிவைத்தனர்.
க்ராபிக்ஸ் காட்சிகள் உருவாக்குவதில் சிக்கல்கள் இருப்பதாகவும், படப்பிடிப்பு நடக்கும் போது சரியான திட்டமிடல் இல்லாததால் தான் க்ராபிக்ஸ் கட்சிகளுக்கு காலதாமதமாகிறது, அதற்கான வேளைகளில் மும்முரமாக இறங்கியுள்ளார் ஷங்கர் என்றும் கூறப்படுகிறது.
மேலும், 2.0 படத்திற்கு சுமார் 450 கோடி ரூபாய் என முதலில் பட்ஜெட் போடப்பட்டது. ஆனால் தற்போது க்ராபிக்ஸ் காட்சிகளில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால் படத்தின் பட்ஜெட் தற்போது 100 கோடி வரை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது மொத்த பட்ஜெட் 550 கோடி என எகிறியுள்ளது.
இயக்குனர் ஷங்கருக்கு கிராபிக்ஸ் காட்சிகளில் திருப்தி ஏற்படாததால் மட்டுமே இவ்வளவு காலதாமதமாகிறது என்றும் இதனால், 2.0 படத்தை ஜனவரி 25ம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.