Advertisement

ஆடி மாத திருவிழாவில் ஒயிலாட்டம் ஆடிய சூரி

சின்னத்திரையில் அறிமுகமான நடிகர் சூரி தற்போது தமிழ் சினிமாவில் முக்கிய இடத்தை பிடித்துவிட்டார். சூரி காமெடியனாக நடித்து வெளிவரும் படங்கள் அனைத்தும் ஹிட் அடித்துள்ளன.

Actor Soori

அதே சின்னத்திரையில் இருந்து வெளி வந்த நடிகர்கள் சிவகார்த்திகேயன், சந்தானம், லொள்ளு சபா ஜீவா என பலர் பெரிய திரையில் ஜொலித்து வருகின்றனர். நடிகர் சூரியும் அதனை நிரூபித்து விட்டார்.

சிவகார்த்திகேயன் சூரியுடன் இணைந்து நடித்த படங்களே அதிகம். மனம் கொத்தி பறவை, வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன், தற்போது வெளியாகவுள்ள சீமராஜா என ஏறத்தாழ எல்லா படங்களிலும் இணைந்துள்ளனர்.

அரண்மனை 2, வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன், மருது, ஜில்லா, வேதாளம், சிங்கம் 3, ஸ்கெட்ச் என முன்னணி நடிகர்களுடன் இணைந்து விட்டார். தற்போது அவர் நடிப்பில் வெளியான கடைக்குட்டி சிங்கம் படத்தில் அவரின் கதாபாத்திரமும், நகைச்சுவைகளையும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

இந்நிலையில், தனது சொந்த ஊரான மதுரையில் உள்ள ராஜாகூரில் உள்ள காளியம்மன் கோவிலில் ஆடி மாதத்தை முன்னிட்டு திருவிழா நடைபெற்று வருகிறது. திருவிழாவில் கலந்து கொள்ள சென்ற நடிகர் சூரி அங்கு நடைபெற்று வந்த ஒயிலாட்டத்தில் திடிரென தனது உறவினர்களுடன் நடனமாடினார். அதனை சமூக வலைத்தளத்தில் அவரே பதிவேற்றம் செய்துள்ளார். தற்போது அது சமூக வலைத்தளங்களை சுற்றி வருகிறது.