தமிழக துணை முதல்வர் ஓ,பன்னீர்செல்வம் பதவி விலக வேண்டும் என்று கூறியதற்கு, கமலுக்கு அதிமேதாவி என்று நினைப்பு என்று அமைச்சர் கடம்பூர் ராஜு காட்டமாக தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் கடம்பூர் சென்றுள்ள அமைச்சர் கடம்பூர் ராஜு அங்கு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: சமீபத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர், துணை முதலமைச்சர் மீது ஊழல் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளதால் அவர் உடனடியாக பதவி விலக வேண்டும் என்று கூறியிருந்தார். அதற்கு பதில் அளித்த அமைச்சர் கடம்பூர் ராஜு, எந்த ஒரு சட்டத்திலும் முதல் தகவல் அறிக்கை, அல்லது வழக்கு பதிவு செய்தவுடன் பதவி விலக வேண்டும் என்று கூறவில்லை.
நடிகர் கமல்ஹாசன் தன்னை ஒரு அதிமேதாவியாக கருதி கொண்டு பேசிவருகிறார். கமல் அரசியலுக்கு லாயக்கியற்றவர். ஒருவர் மீது யார் குற்றம் சுமத்தினாலும், அது நிரூபிக்கப்பட வேண்டும். அது நிரூபணமானால் தான் அவர் குற்றவாளி. சட்டமன்றம் கூட்டத்தொடர் 46 நாட்கள் நடந்து முடிந்தன அப்போது அவர் மீது பதியப்பட்டுள்ள எந்த வித குற்றச்சாட்டும் நிரூபிக்க படவில்லை என காட்டமாக பதில் கூறினார் அமைச்சர் கடம்பூர் ராஜு.