8 வழிச்சாலைக்கு எதிர்ப்பு: அம்மனிடம் மனு கொடுத்து வேண்டிய விவசாயிகள்

Jul 28, 2018, 18:00 PM IST

சேலம் - சென்னை 8 வழிச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து அம்மனிடம் மனு கொடுத்து விவசாயிகள் நூதன வேண்டுதல் செய்தனர்.

சென்னை - சேலைம் இடையே 8 வழிச்சாலை அமைப்பதில் தமிழக அரசு முனைப்பு காட்டி வருகிறது. இதற்காக ரூ.10 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்காக, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட 5 மாவட்டங்களில் நிலம் கையகப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்த திட்டம் அறிவிக்கப்பட்டது முதல், அம்மாவட்ட விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆனாலும், அதிகாரிகள் 8 வழிச்சாலை அமைப்பதில் மும்முரமாகவும், அதற்கான பணியையும் செய்து வருகின்றனர்.

சேலம் குப்பனூர் பகுதியில் 8 வழிச்சாலை அமையவுள்ளது. இதனால், அப்பகுதி மக்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். இதனால், அப்பகுதி மக்கள் அங்குள்ள குப்பனூர் காட்டுவலவு பெரியாண்டிச்சி அம்மன் கோயிலில் நூதனமாக வழிப்பட்டனர்.

அதாவது, இக்கோயிலில் நேற்று ஆடி வெள்ளிக்கிழமை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. அப்போது, 8 வழிச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து அம்மானிடம் மனு அளித்தனர்.

அந்த மனுவில், “தங்களின் வாழ்வாதாரமான விவசாய நிலத்தை 8 வழி சாலைக்காக எடுக்க அரசு முயற்சிக்கிறது. பலமுறை அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தும் இத்திட்டத்தை நிறைவேற்றியே தீருவோம்.

பெரியாண்டிச்சி அம்மன் தான் எங்க நிலத்தை காப்பாற்றி தரணும். விளை நிலங்களை அழிக்க முயற்சி செய்யும் நபர்களுக்கு கடும் தண்டனையை வழங்கு தாயே” என்று மனுவில் குறிப்பிட்டு வேண்டுதலை முன்வைத்தனர். இந்த நூதன வேண்டும் கேள்விப்பட்டு அனைவரும் ஆச்சரியமும் அடைந்தனர்.

You'r reading 8 வழிச்சாலைக்கு எதிர்ப்பு: அம்மனிடம் மனு கொடுத்து வேண்டிய விவசாயிகள் Originally posted on The Subeditor Tamil

More Akkam pakkam News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை