விஸ்வரூபம் 2: கட்சி நிர்வாகிகளுக்கு கமல் அதிரடி அறிவிப்பு

விரைவில் வெளியாக இருக்கும் விஸ்வரூபம் 2 படத்தின் விளம்பரப்படுத்தும் பணிகளின்போது கட்சியின் சின்னம், கொடி ஆகியவை பயன்படுத்தக்கூடாது என்று நிர்வாகிகளுக்கு மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அறிவுறுத்தி உள்ளார்.

உலக நாயகன் கமல்ஹாசன் இயக்கி நடித்து கடந்த 2013ம் ஆண்டு வெளியான திரைப்படம் விஸ்வரூபம். பல்வேறு தடைகளை தாண்டி இத்திரைப்படம் வெளிவந்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

இதன் வெற்றியின் தொடர்ச்சியாக விஸ்வரூபம் 2 திரைப்படத்தை இயக்கி, நடித்துள்ளார் கமல்ஹாசன். இந்த படம் வரும் ஆகஸ்டு 10ம் தேதி உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது. ஜிப்ரான் இசையில் வெளியாகும் விஸ்வரூபம் 2வில், பூஜா, ஆண்ட்ரியா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

படம் வெளியாகும் தேதி நெருங்கி வருவதால், விஸ்வரூபம் 2 படத்தை விளம்பரம் செய்யும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், விளம்பரப்பணியின் போது கட்சியை பயன்படுத்தக்கூடாது என்று கட்சி நிர்வாகிகளுக்கு கமல் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அதாவது, விஸ்வரூபம் 2 படம் திரையரங்குகளில் வெளியாவதை முன்னிட்டு, போஸ்டர்கள், பேனர்கள் மற்றும் வெளியீட்டு நிகழ்ச்சிகளில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் கொடி, சின்னம் ஆகியவற்றை பயன்படுத்தக்கூடாது. மேலும், இந்த பணிகளை நற்பணி இயக்கம் சார்பில் மேற்கொள்வார்கள் என்றும் இதில் கட்சியனர் தலையிட வேண்டாம் என்றும் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் கட்சி நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தி உள்ளார்.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
actress-varalakshmi-marriage
நடிகை வரலட்சுமி திருமணம்... சரத்குமார் அட்டகாச ஆட்டம்... தாய்லாந்தில் களை கட்டும் திருமணம்
director-vasanthabalan-tested-covid-positive
கொரோனா தொற்று உறுதி – மருத்துவமனையில் இயக்குநர் வசந்தபாலன் அனுமதி
ratchasan-2-part-is-on-the-way
ராட்சசன் 2வது பாகம் தயார்.. விஷ்ணு விஷால் இன்ப அதிர்ச்சி..!
deepika-padukone-tests-positive-for-covid-19
நடிகை தீபிக படுகோனுக்கு என்ன ஆச்சு? – ரசிகர்கள் கலக்கம்!
priya-bhavani-shankar-hits-back-to-the-trolls
சீட்ட தூக்கிட்டு நில்லுன்னு அர்த்தமில்ல – பிரியா பவானி சங்கரின் மிரட்டல் அடி!
pia-bajpai-brother-passes-away-due-to-covid-19
மருத்துவ உதவி கேட்டு அலைந்த பிரபல நடிகைக்கு நிகழ்ந்த சோகம்!
arrahman-congrats-to-stalin
ஏ.ஆர்.ரஹ்மான் போட்ட ட்வீட்.. உடனே ரிப்ளே செய்த ஸ்டாலின் – வைரலாகும் பதிவு!
rashmika-mandanna-says-rcb-is-her-favourite-team-gone-viral
ஐபிஎல் அணி குறித்து நடிகை ராஷ்மிகா என்ன சொன்னார் தெரியுமா?
actor-sivakarthikeyan-birthday-wishes-to-ajith
அஜித்துக்கு இப்படியொரு பிறந்தநாள் வாழ்த்து – சிவகார்த்திகேயனை பாராட்டும் ரசிகர்கள்!
actor-surya-statement-regarding-director-kv-anand-dead
ஒரு போர்களத்தில் நிற்பதை போல உணர்ந்தேன் – நினைவுகளை பகிரும் நடிகர் சூர்யா!
Tag Clouds