நடிகை ப்ரியா வாரியர் நடித்த பாடலுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
ஒரு அடார் லவ் என்ற மலையாளப் படத்தில் ‘மாணிக்ய மலராய பூவி’ என்ற பாடலில் இளம் மலையாள நடிகை பிரியா வாரியர் நடித்திருந்தார். காதலனை பார்த்து ப்ரியா வாரியார் கண் சிமிட்டும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலானது.
கேரளாவில் மட்டுமில்லாமல் உலகம் முழுக்க ப்ரியாவின் கண்ணசைவை வைத்து பல வீடியோவும், மீம்ஸ்களும் வெளியானது. இந்த பாடலை எதிர்த்து தெலுங்கானா மற்றும் மும்பை மாநில காவல்நிலையங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இஸ்லாமியர்களின் மனதைப் புண்படுத்தும் விதத்திலும், மத உணர்வுகளைக் காயப்படுத்தும் நோக்கிலும், இந்தப் பாடல் அமைந்ததாக புகார் மனுக்களில் குற்றம்சாட்டிப்பட்டிருந்தது.
இந்த புகார்களில் பிரியா வாரியரை குற்றம் சாட்டப்படும் முதல் நபராகவும், படத்தின் இயக்குநரை இரண்டாவது நபராகவும் சேர்க்கப்பட்டிருந்தது. இதனை எதிர்த்து ப்ரியா வாரியர் தொடர்ந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், வழக்குகளை விசாரிக்க இடைக்கால தடை விதித்தது.
இந்நிலையில் இந்த வழக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது போது, ப்ரியா வாரியர், இயக்குர் மீதான வழக்குகளை தள்ளுபடி செய்யப்பட்டது.