டிரெண்டிங்கில் துப்பாக்கி முனை டீஸர்!

கலைப்புலி எஸ். தாணு தயாரிப்பில், விக்ரம் பிரபு நடிப்பில் அறிமுக இயக்குநர் தினேஷ் செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள துப்பாக்கி முனை டீஸர் ரிலீசாகி யுடியூப் டிரெண்டிங்கில் 6வது இடத்தில் உள்ளது.

Thuppaki Munai

துப்பாக்கி முனை டீஸரை நேற்று மாலை 6 மணிக்கு இயக்குநர் கெளதம் மேனன் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.

கும்கி படத்தில் வெற்றியுடன் அறிமுகமான விக்ரம் பிரபுவுக்கு, அதன் பின்னர் ஓரிரு படங்களே ஓடின. பின்னர், அவர் நடிப்பில் வெளியான பல படங்கள் ஃபிளாப் ஆக, கமர்ஷியல் மசாலா படங்களை விட்டு, கதையை தேடி அலைந்தார். இரு வாரங்களுக்கு முன்னர் வெளியான 60 வயது மாநிறம் படம் அதன் கதைக் களத்தால், ரசிகர்கள் மனங்களை வென்றது.

இந்நிலையில், துப்பாக்கி முனை என்ற வித்தியாசமான ஆக்‌ஷன் படத்தில் தாடியுடன் தோற்றமளிக்கிறார் விக்ரம் பிரபு. இந்த படம் தனக்கு மீண்டும் வெற்றியை தரும் என்ற நம்பிக்கையுடன் உள்ளார். படத்தில் நாயகியாக ஹன்சிகா நடித்துள்ளார்.

டீஸரின் ஒவ்வொரு காட்சிகளும் அனல் தெறிக்கும் ஸ்டன்டுகள் மற்றும் சேஸிங் சீன்களுடன் ஷார்ப்பாக எடிட் செய்யப்பட்டுள்ளது. பல வழக்குகளை வென்ற போலீஸ் அதிகாரியின் வாழ்க்கையை புரட்டிப் போட்ட ஒரு கேஸ் பற்றிய கதையாக கதையின் கரு அமைந்துள்ளது.

துப்பாக்கி முனையில் இருந்து தோட்டாக்கள் சீறிப்பாய்ந்தால் நன்று!

துப்பாக்கி முனை டீஸர் இதோ!

READ MORE ABOUT :