காற்றின் மொழி டீஸர் ரிலீஸ்!

மொழி படத்திற்கு பிறகு நீண்ட இடைவெளிக்குப் பின் ராதாமோகனின் இயக்கத்தில் நடிகை ஜோதிகா நடித்துள்ள ’காற்றின் மொழி’ படத்தின் டீஸர் தற்போது ஜோதிகாவின் கணவர் மற்றும் நடிகர் சூர்யாவால் வெளியிடப்பட்டுள்ளது.

திருமணத்திற்கு பிறகு மீண்டும் நடிப்புக்கு பச்சைக் கொடி காட்டிய ஜோதிகா, ’36 வயதினிலே’, ’மகளிர் மட்டும்’, பாலாவின் ‘நாச்சியார்’ என உமன் செண்ட்ரிக் படங்களில் நடித்து வருகிறார்.

தற்போது, நடிகை ஜோதிகா கைவசம் மணிரத்னமின் ‘செக்கச்சிவந்த வானம்’, ராதாமோகனின் ‘காற்றின் மொழி’ மற்றும் எஸ்.ராஜ் படம் என 3 படங்கள் உள்ளது. இதில் ‘காற்றின் மொழி’ படம், ‘துமாரி சுலு’ எனும் ஹிந்தி படத்தின் ரீமேக். வித்யா பாலன் நடித்திருந்த ‘துமாரி சுலு’, பாலிவுட்டில் சூப்பர் ஹிட்டானது.

இப்படத்தை ‘கிரியேட்டிவ் என்டர்டைனர்ஸ் - டிஸ்ட்ரிபியூட்டர்ஸ்’ நிறுவனம் சார்பில் தனஞ்செயன் தயாரிக்கிறார். நேஹா தூபியா கேரக்டரில் லக்ஷ்மி மஞ்சுவும், மனவ் கௌல் கதாபாத்திரத்தில் விதார்த்தும் நடித்துள்ளனர். சிம்பு கெஸ்ட் ரோலில் நடித்துள்ளார். ஏ.ஹெச்.காஷிப் இசையமைக்கும் இதற்கு மகேஷ் முத்துசுவாமி ஒளிப்பதிவு செய்துள்ளார், பிரவீன்.கே.எல் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார், பொன் பார்த்திபன் வசனம் எழுதியுள்ளார்.

இதன் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், படத்தின் டீஸரை நடிகர் சூர்யா ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். இந்த டீஸர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. படத்தை அக்டோபர் 18-ஆம் தேதி ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர். வெகு விரைவில் டிரெய்லர் மற்றும் ஆடியோ ரிலீஸ் தேதிகள் குறித்த அப்டேட்ஸ் வெளியாகவுள்ளது.

இதோ ‘காற்றின் மொழி’ டீஸர்:

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
actress-varalakshmi-marriage
நடிகை வரலட்சுமி திருமணம்... சரத்குமார் அட்டகாச ஆட்டம்... தாய்லாந்தில் களை கட்டும் திருமணம்
director-vasanthabalan-tested-covid-positive
கொரோனா தொற்று உறுதி – மருத்துவமனையில் இயக்குநர் வசந்தபாலன் அனுமதி
ratchasan-2-part-is-on-the-way
ராட்சசன் 2வது பாகம் தயார்.. விஷ்ணு விஷால் இன்ப அதிர்ச்சி..!
deepika-padukone-tests-positive-for-covid-19
நடிகை தீபிக படுகோனுக்கு என்ன ஆச்சு? – ரசிகர்கள் கலக்கம்!
priya-bhavani-shankar-hits-back-to-the-trolls
சீட்ட தூக்கிட்டு நில்லுன்னு அர்த்தமில்ல – பிரியா பவானி சங்கரின் மிரட்டல் அடி!
pia-bajpai-brother-passes-away-due-to-covid-19
மருத்துவ உதவி கேட்டு அலைந்த பிரபல நடிகைக்கு நிகழ்ந்த சோகம்!
arrahman-congrats-to-stalin
ஏ.ஆர்.ரஹ்மான் போட்ட ட்வீட்.. உடனே ரிப்ளே செய்த ஸ்டாலின் – வைரலாகும் பதிவு!
rashmika-mandanna-says-rcb-is-her-favourite-team-gone-viral
ஐபிஎல் அணி குறித்து நடிகை ராஷ்மிகா என்ன சொன்னார் தெரியுமா?
actor-sivakarthikeyan-birthday-wishes-to-ajith
அஜித்துக்கு இப்படியொரு பிறந்தநாள் வாழ்த்து – சிவகார்த்திகேயனை பாராட்டும் ரசிகர்கள்!
actor-surya-statement-regarding-director-kv-anand-dead
ஒரு போர்களத்தில் நிற்பதை போல உணர்ந்தேன் – நினைவுகளை பகிரும் நடிகர் சூர்யா!
Tag Clouds