சிம்பு படத்தில் இணைந்த கேத்ரின் தெரசா !

by Mari S, Sep 28, 2018, 22:47 PM IST

’பவர்ஸ்டார்’ பவண் கல்யாண் நடிப்பில் தெலுங்கில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்டடித்த படம் அத்தாரிண்டிகி தாரேதி. அந்த படத்தை தமிழில் சிம்புவை வைத்து ரீமேக் செய்கிறார் சுந்தர்.சி.

பவண் கல்யாண் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை நதியா கலக்கியிருந்தார். தமிழில் அந்த ரோலில் தனது மனைவி மற்றும் நடிகை குஷ்புவை நடிக்க வைத்துள்ளார் இயக்குநர். மேலும், அந்த படத்தில் கதா நாயகியாக சமந்தாவும், இரண்டாவது கதா நாயகியாக பிரணிதாவும் நடித்திருந்தனர்.

சிம்பு படத்தில் கதா நாயகியாக ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்திருந்த மேகா ஆகாஷை தேர்வு செய்துள்ளனர். இந்நிலையில், பிரணிதாவின் கதாபாத்திரத்திற்கான நடிகையர் தேர்வு நடைபெற்றது. தற்போது, பிரணிதா நடித்த ரோலில் நடிக்க ‘மெட்ராஸ்’ பட நாயகி கேத்ரின் தெரசாவை ஒப்பந்தம் செய்துள்ளனர்.

இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் கோலாகலமாக ஒரு பாடல் காட்சியுடன் தொடங்கியது. இந்நிலையில், படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அப்போ ‘பிக்பாஸ்’ ஐஸ்வர்யா எந்த படத்தில நடிக்க போறாரு?

You'r reading சிம்பு படத்தில் இணைந்த கேத்ரின் தெரசா ! Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை