மேற்கு ஆஸ்திரேலியா மற்றும் குயின்ஸ்லாந்து அணிகளுக்கு இடையேயான ஒரு நாள் போட்டியில், மேற்கு ஆஸ்திரேலிய அணியின் துவக்க ஆட்டக்காரர் டி ஆர்சி ஷார்ட், 148 பந்துகளில் 23 சிக்ஸர்களும், 15 பவுண்டரிகளும் விளாசினார்.
இதனால், ஒருநாள் போட்டிகளில் அதிக ஸ்கோர் குவித்த முதல் ஆஸ்திரேலிய வீரர் என்ற பெயரையும், உலகளவில் மூன்றாவது வீரர் என்ற பெருமையையும் பெற்றார்.
ஆஸ்திரேலியாவின் உள்ளூர் அணிகளுக்கு இடையேயான போட்டியில், மேற்கு ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்தது. அதன் துவக்க ஆட்டக்காரரான டி ஆர்சி ஷார்ட், 148 பந்துகளை எதிர்கொண்டு 23 சிக்ஸர்களும், 15 பவுண்டரிகளும் விளாசி 257 ரன்கள் எடுத்திருந்த நிலையில், அவுட்டானர்.
இதனால், அதிக ரன்கள் குவித்த ஆஸ்திரேலியாவின் முதல் வீரர் என்ற பெருமையை பெற்றார். ஆனால், இந்தியாவின் ரோகித் சர்மா 264 ரன்களும், இங்கிலாந்தின் அலஸ்டைர் குக் 268 ரன்களும் முன்னிலை வகிக்கின்றனர்.
மேற்கு ஆஸ்திரேலிய அணி 47 ஓவர்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 387 ரன்களை குவித்தது.
அதன் பின்னர் களமிறங்கிய குயின்ஸ்லாந்து புல்ஸ் அணி 42.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து வெறும் 271 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது.
அபாரமாக விளையாடி 257 ரன்களை குவித்த டி ஆர்சி ஷார்ட்டுக்கு ஐசிசி முதல் பல கிரிக்கெட் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பாராட்டுக்களை குவித்து வருகின்றனர்.
மேன் ஆப் தி மேட்ச் விருதும் டி ஆர்சி ஷார்ட்டுக்கே வழங்கப்பட்டது.