சிம்டாங்காரன் vs ஒருவிரல் புரட்சி!

Advertisement

இந்த ஆண்டு தீபாவளி தளபதி தீபாவளி தான். சர்க்கார் படத்தோட சரவெடியாய் கொண்டாட ரசிகர்கள் ரெடியாயிட்டாங்க.

துப்பாக்கி படத்துல தேசபக்திய சொன்ன விஜய் – முருகதாஸ் கூட்டணி, கத்தி படத்துல தண்ணீர் பிரச்னையை பேசினாங்க. இந்த ரெண்டு படமும் பயங்கர ஹிட்டான நிலையில், மூன்றாவது முறையாக இதே கூட்டணி இணையும்போது, ரசிகர்களின் எதிர்பார்ப்பு மூன்று மடங்கு அல்ல மூவாயிரம் மடங்கு அதிகரித்துள்ளது.

அந்த எதிர்பார்ப்பை எகிற வைக்க, அரசியல் ஆயுதத்தை கையில் எடுத்துள்ளார் முருகதாஸ். படத்தின் போஸ்டர்கள் செய்த புரட்சியை தொடர்ந்து இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் இசையில், வெளியான சிம்டாங்காரன் பாடல், கடும் விமர்சனத்திற்கு உள்ளானது. கலாய்க்கிறவங்க, கலாய்ங்க, எப்பவுமே விஜய் கிங்குங்க என்ற ரகத்தில், ரசிகர்கள் சிம்டாங்காரன வைரல் ஹிட்டாக்கினாங்க!

வரும் அக்டோபர் 2ம் தேதி, அதாவது நாளை காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, சர்க்கார் பட பாடல்கள் பிரம்மாண்ட விழாவுடன் ரிலீஸ் செய்யப்படுகின்றன. இதனை முன்னிட்டு, நேற்று வெளியிடப்பட்ட, 2வது சிங்கிளான ‘ஒரு விரல் புரட்சி’ அனைத்து சமூக ஊடகங்களிலும் நம்பர் ஒன் இடத்தை பிடித்துள்ளது.

சிம்டாங்காரனை விமர்சித்த எல்லோரும், ஏன் அஜித் ரசிகர்கள் உட்பட ‘ஒரு விரல் புரட்சி’ பாடலை புகழ்ந்து தள்ளி வருகின்றனர்.

நேற்று வரை ஏமாளி.. இன்று முதல் போராளி எனத் தொடங்கும், விவேக்கின் வைர வரிகள் மற்றும், இசைப்புயலின் மேஜிக் பிஜிஎம் கலந்த மியூசிக் பாடலை இன்னொரு ‘ஜன கண மன’ ரேஞ்சுக்கு உயர்த்தியுள்ளது. ஒரே நாளில் சுமார் 30 லட்சம் பேர் இதனை பார்த்துள்ளனர்.

ஓட்டுப் போடும், விரலின் புரட்சியை காசுக்கு விற்று விட்டு, மானத்தையும் எதிர்காலத்தையும் இழந்து புலம்பும் தமிழக மக்களுக்கு விழிப்புணர்வு மற்றும் அவர்களின் தவறுகளை சுட்டிக் காட்டும் மனக் கண்ணாடியாக ஒவ்வொரு வரிகளும் உள்ளதே இப்பாடலின் தனிப்பெருமை.

சாமான்ய ரசிகர்கள் முதல் திரை ஜாம்பவான்கள் வரை இந்த பாடலுக்கு தங்களின் ஆதரவையும், பாராட்டையும் வாரி வழங்கி வருகின்றனர்.

அரசியல் கட்சிகள் மெர்சல் படத்திற்கு பிரச்சினை செய்தது போல, இந்த பாடலின் தாக்கத்தால், வர விடாமல் தடுப்பார்கள் என்று இப்போதே ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

மேலும், சர்க்கார் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில், விஜய் புகைப்பிடிப்பது போன்ற காட்சி இடம்பெற்றதால், அதனை கடுமையாக கண்டித்த பாமக தலைவர் அன்புமணி ராமதாசும், இந்த பாடலை வெகுவாக பாராட்டியுள்ளது விஜய் ரசிகர்கள் ரீடுவீட் செய்யும் வைரல் விஷயமாக மாறியுள்ளது.

இந்த பாடலின் வரிகளுக்கேற்ப எப்படி காட்சிகளை அமைத்துள்ளனர் என்பதே இப்போதைக்கு ரசிகர்களின் பில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது. சர்க்கார் நிச்சயம் சாம்ராஜ்யம் ஆளும்!

Advertisement
மேலும் செய்திகள்
don-t-want-to-answer-idiots-nayanthara-kattam-on-the-red-tea-issue
முட்டாள்களுக்கு பதில் சொல்ல விரும்பவில்லை... செம்பருத்தி டீ விவகாரத்தில் நயன்தாரா காட்டம்
coming-to-film-promotion-3-lakhs-to-give-actress-aparnitha-over-game
பட புரமோஷனுக்கு வரனுமா? 3 லட்சம் தரணும்... நடிகை அபர்ணிதா ஓவர் ஆட்டம்... சுரேஷ் காமாட்சி காட்டம்
actress-varalakshmi-marriage
நடிகை வரலட்சுமி திருமணம்... சரத்குமார் அட்டகாச ஆட்டம்... தாய்லாந்தில் களை கட்டும் திருமணம்
director-vasanthabalan-tested-covid-positive
கொரோனா தொற்று உறுதி – மருத்துவமனையில் இயக்குநர் வசந்தபாலன் அனுமதி
ratchasan-2-part-is-on-the-way
ராட்சசன் 2வது பாகம் தயார்.. விஷ்ணு விஷால் இன்ப அதிர்ச்சி..!
deepika-padukone-tests-positive-for-covid-19
நடிகை தீபிக படுகோனுக்கு என்ன ஆச்சு? – ரசிகர்கள் கலக்கம்!
priya-bhavani-shankar-hits-back-to-the-trolls
சீட்ட தூக்கிட்டு நில்லுன்னு அர்த்தமில்ல – பிரியா பவானி சங்கரின் மிரட்டல் அடி!
pia-bajpai-brother-passes-away-due-to-covid-19
மருத்துவ உதவி கேட்டு அலைந்த பிரபல நடிகைக்கு நிகழ்ந்த சோகம்!
arrahman-congrats-to-stalin
ஏ.ஆர்.ரஹ்மான் போட்ட ட்வீட்.. உடனே ரிப்ளே செய்த ஸ்டாலின் – வைரலாகும் பதிவு!
rashmika-mandanna-says-rcb-is-her-favourite-team-gone-viral
ஐபிஎல் அணி குறித்து நடிகை ராஷ்மிகா என்ன சொன்னார் தெரியுமா?

READ MORE ABOUT :

/body>