சிவாஜியான சின்னையாப் பிள்ளை கணேசன்!

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 91வது பிறந்த நாள் இன்று. 1927ஆம் ஆண்டு, அக்டோபர் 1ஆம் தேதி விழுப்புரத்தில், சின்னையா மன்றாயருக்கும், ராஜாமணி அம்மாளுக்கும் மகனாக பிறந்த சிவாஜி கணேசனுக்கு, பெற்றோர்கள் சூட்டிய பெயர் சின்னையாப் பிள்ளை கணேசன்.

பாரதியார், ராஜராஜ சோழன், திருவருட்செல்வர், கப்பலோட்டிய தமிழன், வீரபாண்டிய கட்டபொம்மன் என வரலாற்று சிறப்புமிக்க தலைவர்களின் முகமாய் இன்றும் திகழ்கிறார் சிவாஜி கணேசன்.

நாடகத்தில் ஆர்வம் எழுந்ததால், நாடக நடிகரானார். சிவாஜி கண்ட இந்துராஜ்யம் எனும் நாடகத்தில் மராட்டிய மன்னன் வீரசிவாஜியாக நடித்த சின்னையாப் பிள்ளை கணேசனின் நடிப்பு திறனை பாராட்டிய தந்தை பெரியார், சிவாஜி என்ற பட்டப்பெயரை கணேசனுக்கு சூட்டினார். பின்னாளில் சிவாஜி என்றே அவர் அழைக்கப்பட்டார்.

திருவிளையாடல், கந்தன் கருணை, சரஸ்வதி சபதம், திருவருட்செல்வர் போன்ற பக்தி காவியங்களிலும், பராசக்தி, ராஜபார்ட் ரங்கதுரை போன்ற பகுத்தறிவு படங்களிலும் நடித்த நடிப்பு சக்கரவர்த்தி சிவாஜி கணேசன்.

எம்.ஜி.ஆர் புகழின் உச்சியில் இருக்கும்போது, தனது நடிப்பால், தமிழ் திரையுலக மக்களின் இடங்களை பிடித்தவர். அண்ணா, எம்.ஜி.ஆர், கருணாநிதி, ஜெயலலிதா என நான்கு தமிழக முதல்வர்களின் நண்பராகவும், அவர்களுடன் திரையுலகில் பணிபுரிந்த கலைஞராகவும் சிவாஜி கணேசன் திகழ்ந்தார்.

தனது தனித்துவமான சிம்மக் குரலால், தமிழகத்தையே ஆட்சி செய்த வணங்காமுடி சிவாஜி கணேசன். கால மாற்றத்துக்கு ஏற்றார் போல், குணசித்திர கதாபாத்திரத்திலும் நடித்து பெருமை பெற்றவர். தமிழ் சினிமாவை பெருமை படுத்தியவர். ஆஸ்கார் வரை பரிந்துரைக்கப்பட்ட சிவாஜியின் தெய்வமகன் படத்திற்கு தேசிய விருது கிடைக்கவில்லை.

பாரதிராஜாவின் முதல் மரியாதை படத்தில், நாடகத் தன்மையுடன் நடிக்கிறார் என்ற இமேஜையும் உடைத்தபோதும், தேசிய விருது சிவாஜிக்கு கிடைக்கவில்லை. அது தேசிய விருதுக்கு கிடைக்காத மரியாதை தானே தவிர சிவாஜிக்கு இல்லை.

இப்படி ஒரு நடிப்பு பல்கலைக் கழகம் உலக அரங்கிலே இல்லை என்ற புகழுக்குரியவர் சிவாஜி கணேசன். காமராசர் மீது கொண்ட பற்றின் காரணமாக 1961ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். 1982ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தின் மேலவை உறுப்பினரானார். கட்சியில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 1987ல் வெளியேறினார். தமிழக முன்னேற்ற முன்னணி என்ற தனிக் கட்சியை தொடங்கினார். ஆனால், எம்.ஜி.ஆருக்கு கிடைத்த பெரும் அரசியல் சிம்மாசனம் சிவாஜிக்கு கிடைக்கவில்லை.

ஆப்பிரிக்க - ஆசியத் திரைப்பட விழாவில் (கெய்ரோ,1960), சிறந்த நடிகருக்கான விருது. பத்ம ஸ்ரீ விருது (1966) பத்ம பூஷன் விருது (1984) செவாலியே விருது (1995) தாதா சாகேப் பால்கே விருது (1997) 1962ல் அமெரிக்க நாட்டின் சிறப்பு விருந்தினராக சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது, நயாகரா மாநகரின் 'ஒரு நாள் நகரத்தந்தையாகக்' கௌரவிக்கப்பட்டார்.

தென்னிந்திய திரைப்படத் துறையில், சிறந்த நடிகராக விளங்கிய சிவாஜி கணேசன் அவர்கள், சுவாசப் பிரச்சினைக் காரணமாக, சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, ஜூலை 21, 2001 ஆம் ஆண்டு தனது 74வது வயதில் மரணமடைந்தார்.

ஈடு இணையற்ற ஒரு நடிப்பு சாம்ராட்டின் சகாப்தம் முடிந்தது, தமிழ் திரையுலகிற்கு ஈடு செய்யமுடியாத இழப்பாக இன்றளவும் உள்ளது. சிவாஜியின் சிம்மாசனம் என்றைக்கும் காலியாகவே இருக்கும். அதை தொட்டு வணங்கும் நடிகர் கூட்டம் சினிமா உலகம் மறையும் வரை நீடிக்கும்!

Advertisement
மேலும் செய்திகள்
don-t-want-to-answer-idiots-nayanthara-kattam-on-the-red-tea-issue
முட்டாள்களுக்கு பதில் சொல்ல விரும்பவில்லை... செம்பருத்தி டீ விவகாரத்தில் நயன்தாரா காட்டம்
coming-to-film-promotion-3-lakhs-to-give-actress-aparnitha-over-game
பட புரமோஷனுக்கு வரனுமா? 3 லட்சம் தரணும்... நடிகை அபர்ணிதா ஓவர் ஆட்டம்... சுரேஷ் காமாட்சி காட்டம்
actress-varalakshmi-marriage
நடிகை வரலட்சுமி திருமணம்... சரத்குமார் அட்டகாச ஆட்டம்... தாய்லாந்தில் களை கட்டும் திருமணம்
director-vasanthabalan-tested-covid-positive
கொரோனா தொற்று உறுதி – மருத்துவமனையில் இயக்குநர் வசந்தபாலன் அனுமதி
ratchasan-2-part-is-on-the-way
ராட்சசன் 2வது பாகம் தயார்.. விஷ்ணு விஷால் இன்ப அதிர்ச்சி..!
deepika-padukone-tests-positive-for-covid-19
நடிகை தீபிக படுகோனுக்கு என்ன ஆச்சு? – ரசிகர்கள் கலக்கம்!
priya-bhavani-shankar-hits-back-to-the-trolls
சீட்ட தூக்கிட்டு நில்லுன்னு அர்த்தமில்ல – பிரியா பவானி சங்கரின் மிரட்டல் அடி!
pia-bajpai-brother-passes-away-due-to-covid-19
மருத்துவ உதவி கேட்டு அலைந்த பிரபல நடிகைக்கு நிகழ்ந்த சோகம்!
arrahman-congrats-to-stalin
ஏ.ஆர்.ரஹ்மான் போட்ட ட்வீட்.. உடனே ரிப்ளே செய்த ஸ்டாலின் – வைரலாகும் பதிவு!
rashmika-mandanna-says-rcb-is-her-favourite-team-gone-viral
ஐபிஎல் அணி குறித்து நடிகை ராஷ்மிகா என்ன சொன்னார் தெரியுமா?

READ MORE ABOUT :