மலையாளத்தில் அறிமுகமான கீர்த்தி சுரேஷ், தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக மாறியுள்ளார். தற்போது, மீண்டும் மலையாளத்தில் மோகன் லால் படத்தில் வாய்ப்பு கிடைத்துள்ளதாக செய்திகள் வெளியாகின. ஆனால், இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் மோகன் லாலுக்கு ஜோடியாக நடிக்கவில்லை என்றும், சீன நடிகர் ஒருவருக்கு ஜோடியாக நடிக்கின்றார் என்ற புதிய தகவல் கிடைத்துள்ளது.
இயக்குநர் பிரியதர்ஷன், தனது கனவு படமான ‘மரக்கார்: அரபிக் கடலிண்டே சிம்ஹம்’ படத்தை மோகன் லாலை வைத்து இயக்கவுள்ளார். இப்படம், 16-ம் நூற்றாண்டில் கேரளாவில் வாழ்ந்த கடற்படைத் தலைவனான குஞ்சலி மரக்கார் என்பவரின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டதாம்.
ஆங்கிலேயர்களை ஓட ஓட விரட்டிய குஞ்சலி மரக்கார் வேடத்தில் மோகன் லாலும், இளம் வயது குஞ்சலி மரக்காராக அவரது மகன் பிரணவ் மோகன் லாலும் நடிக்கின்றனர்.
சிறைச்சாலை படத்திற்கு பிறகு, 22 ஆண்டுகள் கழித்து, மீண்டும் மோகன் லாலுடன் முக்கிய வேடத்தில் நடிகர் பிரபு நடிக்கவுள்ளார்.
சினிமா உலகிற்கு தன்னை அறிமுகப்படுத்திய பிரியதர்ஷன் படம் என்றதும் ஓகே சொன்ன கீர்த்தி சுரேஷ், மோகன் லாலுக்கு ஜோடியாக நடிக்கவில்லை என்றும், சீன நடிகர் ஒருவருக்கு ஜோடியாக நடிக்கிறார் என்ற தகவலும் வெளிவந்து கீர்த்தி சுரேஷ் ரசிகர்களை அப்செட் செய்துள்ளது.