இயக்குநர் ஆடம் மெக்கேவின் இயக்கத்தில், நம்ம ஊர் விக்ரமுக்கே ரோல் மாடல் என அழைக்கப்படும் கிரிஸ்டியன் பேலின் ‘வைஸ்’ பட டிரெய்லர் ரிலீசாகியுள்ளது.
அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் ஆட்சியில், உலக அரங்கில், அமெரிக்காவை தூக்கி நிறுத்த உதவியவர் துணை ஜனாதிபதி டிக் சென்னி. அவரது பயோபிக்கை எடுத்து விளையாண்டுள்ளார் கிறிஸ்டியன் பேல், வரும் கிறிஸ்துமஸ் ரிலீசாக திரைக்கு வரும், இப்படம் அடுத்த வருடம் பிப்ரவரி மாதத்தில் நடைபெறும் ஆஸ்கர் போட்டியில், கடும் போட்டியாளராகவும், பல விருதுகளை வெல்லும் வெற்றியாளராகவும் திகழும் என்பது படத்தின் டிரெய்லரை பார்த்தாலே புரிந்து விடும்.
ஜார்ஜ் புஷ்-ஆக சாம் ராக்வெல், டிக் சென்னியின் மனைவி லின்னே சென்னியாக எமி ஆடம்ஸ், அமெரிக்காவின் தலைமை அதிகாரியாக ஸ்டீவ் கேரல் என நட்சத்திர பட்டாளமே, இப்படி ஒரு பவுர்ஃபுல்லான படத்தில் இணைந்துள்ளனர்.
அமெரிக்கன் ஹஸல் படத்திற்கு 104 கிலோ வரை எடைக் கூட்டிய கிறிஸ்டியன் பேல், இப்படத்திற்காக சுமார் 110 கிலோ வரை எடையைக் கூட்டி நடித்துள்ளார். இப்படம் நிறைவடைந்த நிலையில், தற்போது அடுத்த படமான ரெஸ்க்யூ டான் அண்ட் தி ஃபைடர் படத்திற்காக எதிர்பாராத அளவிற்கு உடல் எடையை மீண்டும் குறைத்து நடித்து வருகிறார். இப்படம் அடுத்த ஆண்டு வெளியாகிறது.
தி மெஷினிஸ்ட் படத்திற்காக கிறிஸ்டியன் பேல், 45 கிலோ வரை எடை குறைத்து நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. பேட்மேன் படத்திற்காக, 100 கிலோ எடை அதிகரித்து நடித்தார். இவர் சொல்வது போல், இவரது உடல் எடை மாறும் என்பது உலகம் அறிந்த ஒன்றே.. இந்த படத்திற்கும் கிறிஸ்டியன் பேலுக்கு ஒரு ஆஸ்கரை பார்சல் பண்ணுங்க!