தன் மீது சுமத்தப்பட்டுள்ள பாலியல் அவதூறுக்கு காலம் உண்மையைச் சொல்லும் என வைரமுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிடுள்ளார்.
வைரமுத்து மீது ஏற்கனவே ஒரு பெண் பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்த நிலையில், கல்லூரியில் படிக்கும் இளம்பெண் ஒருவர் வைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டை கூறியுள்ளார். அது தொடர்பான ட்வீட்டை பத்திரிக்கையாளர் சந்தியா மேனன் ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.
இந்தியாவின் பல்வேறு திரைத்துறையில் பாலியல் தொந்தரவுகள் குறித்த புகார்களை பிரபல நடிகைகள் எழுப்பி வரும் நிலையில், தமிழ் திரைப்பட பாடலாசிரியர் வைரமுத்து மீது பெண் ஒருவர் பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
வைரமுத்து தன் மீதான பாலியம் புகார் குறித்து வைரமுத்து விளக்கம் அளித்துள்ளார்.
“அறியப்பட்டவர்கள் மீது அவதூறு பரப்பும் அநாகரிகம் நாடெங்கும் இப்போது நாகரிகமாகி வருகிறது. அண்மைக்காலமாக நான் தொடர்ச்சியாக அவமானப்படுத்தப்பட்டு வருகிறேன்; அவற்றுள் இதுவும் ஒன்று. உண்மைக்குப் புறம்பான எதையும் நான் பொருட்படுத்துவதில்லை; உண்மையைக் காலம் சொல்லும்.” என தெரிவித்துள்ளார்
வைரமுத்துவின் பதிவிற்கு லையர் என சின்மயி பதிலளித்துள்ளார் மேலும் அவர் மீது குற்றசாட்டையும் தெரிவித்துள்ளார் பாடகி சின்மயி.
கடந்த 2005 அல்லது 2006ம் ஆண்டு சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற இசை நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள தான் சென்ற போது நிகழ்ச்சி முடிந்த பிறகு தன்னையும், தனது தாயாரையும் மட்டும் காத்திருக்குமாறு ஏற்பாட்டாளர்கள் கேட்டுக் கொண்டதாகவும் அப்போது, வைரமுத்து இருக்கும் ஓட்டல் அறைக்கு செல்லுமாறு தன்னை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் ஒருவர் கேட்டுக் கொண்டதாக சின்மயி தெரிவித்துள்ளார்.
எதற்கு தான் வைரமுத்து அறைக்கு செல்ல வேண்டும் என்று கேட்ட போது ஒத்துழைப்பு கொடுக்குமாறு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் தெரிவித்ததாகவும் ஒத்துழைக்க மறுத்தால் சினிமா துறையில் எதிர்காலம் இருக்காது என்று நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் தன்னை மிரட்டியதாகவும் சின்மயி தெரிவித்துள்ளார். இதனை ஏற்க மறுத்து தங்களுக்கு எதுவும் முக்கியம் இல்லை என்று கூறிவிட்டு விமானத்தில் நாடு திரும்பிவிட்டதாகவும் சின்மயி கூறியுள்ளார்.
ஆனால் சின்மயியின் குற்றச்சாட்டை வைரமுத்து மறுத்துள்ளார்.