சின்மயியை தொடர்ந்து பாலியல் தொல்லை குறித்து அம்பலப்படுத்திய பிரபல சீரியல் நடிகை!

Advertisement

வெளிநாடுகளில் தொடங்கிய மீடூ மூவ்மெண்ட், பாலிவுட்டில் கங்கனா ரனாவத்தால் சூடுபிடிக்கத் தொடங்கியது. தற்போது, தமிழகத்தையும் அது விட்டுவைக்கவில்லை.

பிரபல பாடகி மற்றும் டப்பிங் ஆர்டிஸ்ட்டான சின்மயி, தனது ட்விட்டர் பக்கத்தில், சினிமா விமர்சனம் செய்யும் இடிஸ் பிரசாந்த், கவிஞர் வைரமுத்து மற்றும் ராதாரவி ஆகியோர் மீது பெயர் குறிப்பிட விரும்பாத பெண்கள் கூறியதாக ஸ்க்ரீன் ஷாட்ஸ்களுடன் பாலியல் தொல்லை கருத்தை தைரியமாக பதிவிட்டார்.

இதனைதொடர்ந்து, தனக்கும் வைரமுத்துவால் பாலியல் தொல்லை நிகழ்ந்ததாக ஓபன் டாக் கொடுத்து தமிழ் சினிமாவையே அதிரவைத்துள்ளார் சின்மயி. இந்நிலையில், வைரமுத்து அதற்கு மறுப்பு தெரிவித்து பதிவிட்ட பதிவுக்கு ‘பொய்யர்’ என ரிப்ளை செய்தார் சின்மயி.

இந்நிலையில், சின்மயின் இந்த தைரியத்தை தான் பாராட்டுவதாகவும், தனக்கும் இதுபோன்ற பாலியல் தொல்லைகள் சின்னத்திரையில் நடந்ததாகவும், சின்னத்திரை நடிகை சாண்ட்ரா தனது சமூக வலைதளத்தில் ஒரு அதிர்ச்சி பதிவு வெளியிட்டுள்ளார்.

அதில், தலையணைப் பூக்கள் சீரியலில் எனக்கு ஜோடியாக பிரகாஷ் ராஜன் என்பவர் நடித்தார். செட்டில் இருக்கும் எல்லா பெண்களையும் அசிங்கமான வார்த்தைகளால் பேசுவார்.

என்னிடம் அப்படி பேசும்போது நான் கொஞ்சம் அவரிடம் இருந்து தள்ளியே இருந்தேன், தயாரிப்பு குழு மற்றும் ஜீ தமிழ் தொலைக்காட்சியிலும் புகார் செய்தேன். தயாரிப்பாளர் சொன்னதால் மீண்டும் நடித்தேன், அப்போது ஒரு நாள் என் உடம்பில் இருக்கும் பாகத்தை மிகவும் மோசமாக விமர்சித்தார். அதை கேட்டதும் அதிர்ச்சியாகி நான் அப்படியே அழுதுவிட்டேன். எனக்கும் இதுபோல் கொடுமைகள் நடந்துள்ளது என மனம் வருந்தி பதிவு செய்துள்ளார்.

இன்னும் யாரெல்லாம் யார் மீதெல்லாம் பாலியல் புகார்களை அடுக்கப் போவார்களோ தெரியவில்லை. ஸ்ரீரெட்டி விஷயத்தில் சப்போர்ட் செய்யாத நடிகர் சங்கம் மற்றும் விஷால், சின்மயி, சாண்ட்ரா போன்றவர்களின் குற்றச்சாட்டுக்கு என்ன சொல்ல போகின்றனர் என்பது போக போகத் தெரியும்.

தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சி காரணமாக இவர்கள் இப்படி செய்கின்றனர் என பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் இருந்தும் விளக்கம் வருகின்றது.

 

Advertisement
மேலும் செய்திகள்
don-t-want-to-answer-idiots-nayanthara-kattam-on-the-red-tea-issue
முட்டாள்களுக்கு பதில் சொல்ல விரும்பவில்லை... செம்பருத்தி டீ விவகாரத்தில் நயன்தாரா காட்டம்
coming-to-film-promotion-3-lakhs-to-give-actress-aparnitha-over-game
பட புரமோஷனுக்கு வரனுமா? 3 லட்சம் தரணும்... நடிகை அபர்ணிதா ஓவர் ஆட்டம்... சுரேஷ் காமாட்சி காட்டம்
actress-varalakshmi-marriage
நடிகை வரலட்சுமி திருமணம்... சரத்குமார் அட்டகாச ஆட்டம்... தாய்லாந்தில் களை கட்டும் திருமணம்
director-vasanthabalan-tested-covid-positive
கொரோனா தொற்று உறுதி – மருத்துவமனையில் இயக்குநர் வசந்தபாலன் அனுமதி
ratchasan-2-part-is-on-the-way
ராட்சசன் 2வது பாகம் தயார்.. விஷ்ணு விஷால் இன்ப அதிர்ச்சி..!
deepika-padukone-tests-positive-for-covid-19
நடிகை தீபிக படுகோனுக்கு என்ன ஆச்சு? – ரசிகர்கள் கலக்கம்!
priya-bhavani-shankar-hits-back-to-the-trolls
சீட்ட தூக்கிட்டு நில்லுன்னு அர்த்தமில்ல – பிரியா பவானி சங்கரின் மிரட்டல் அடி!
pia-bajpai-brother-passes-away-due-to-covid-19
மருத்துவ உதவி கேட்டு அலைந்த பிரபல நடிகைக்கு நிகழ்ந்த சோகம்!
arrahman-congrats-to-stalin
ஏ.ஆர்.ரஹ்மான் போட்ட ட்வீட்.. உடனே ரிப்ளே செய்த ஸ்டாலின் – வைரலாகும் பதிவு!
rashmika-mandanna-says-rcb-is-her-favourite-team-gone-viral
ஐபிஎல் அணி குறித்து நடிகை ராஷ்மிகா என்ன சொன்னார் தெரியுமா?

READ MORE ABOUT :

/body>