சிம்புவுடன் வடசென்னை படத்தில் நடிக்கும் அளவிற்கு தனக்கு பெருந்தன்மை இல்லை என மனம் திறந்துள்ளார் நடிகர் தனுஷ்.
வடசென்னை படத்தின் பிரஸ்மீட் நேற்று நடைபெற்றது. இதில் தனுஷ் பேசும்போது, ‘வடசென்னை’ திரைப்படம் 2003, 2004ல் இருந்து உருவான கதை. பொல்லாதவன் படத்திற்குப் பிறகு வடசென்னை படத்தை எடுக்க நாங்கள் முடிவு செய்தோம். ஆனால், அப்போதைய சூழ்நிலைக்கு வேண்டாம் என்று முடிவு செய்து ஆடுகளம் திரைப்படத்தை எடுத்தோம்.
மீண்டும் நாங்கள் இணைய வேண்டாம் என்று முடிவு செய்து சிறு இடைவெளி விட்டோம். சில நாட்கள் கழித்து ‘வடசென்னை’ படத்தை சிம்புவை அன்பு கதாபாத்திரத்தில் வைத்து எடுக்க முடிவு செய்திருப்பதாக கூறினார். சூப்பர் சார் என்று கூறினேன். பின்னர், அமீர் நடித்துள்ள 40 வயது கதாபாத்திரத்தில் என்னை நடிக்க வேண்டும் என்று கேட்டார். நான் அப்போது எனக்கு அந்தளவிற்கு பெருந்தன்மை இல்லை சார், நான் சாதாரண மனுஷன் தான் எனக் கூறி நடிக்க மறுத்தேன்.
பின்னர் சில காரணங்களால், சிம்புவும் நடிக்க முடியாமல் போனது. 2003ல் ஆரம்பித்தது சுற்றி சுற்றி கடைசியாக என்னிடமே வந்து விட்டது. அதுப்போல், ஐஸ்வர்யா ராஜேஷ் கதாபாத்திரத்திற்கும் முதலில் அவரைத்தான் தேர்வு செய்தோம். அப்புறம் சுற்றி சுற்றி கடைசியாக அவரையே நடிக்க வைத்தோம்.
இவ்வாறு பிரஸ்மீட்டில், வடசென்னை பற்றிய ரகசியங்களை மேடையிலேயே தனுஷ் தெரிவித்தார்.
அமீர் கதாபாத்திரத்திற்கு விஜய்சேதுபதியை உறுதி செய்து பின்னர் அவரும் வெளியேறியதற்கு காரணமும் அதே பெருந்தன்மை குறைபாடு தானோ என கோலிவுட் வட்டாரங்கள் பேச்சை ஆரம்பித்துள்ளன. ஏ சான்றிதழ் கிடைக்கும் என்பதாலும், லிப்லாக் காட்சிகளில் இருந்து தப்பிக்கவும் சமந்தா இந்த படத்தை கைவிரித்திருக்கலாம் என்ற பேச்சுக்களும் எழுந்துள்ளன.