வடசென்னையில் அரைநிர்வாணமாக நடித்துள்ள ஆண்ட்ரியா!

Andrea who acted as half nude in Vada Chennai movie

by Mari S, Oct 12, 2018, 17:11 PM IST

வடசென்னை படத்தில் வரும் ஒரு பாடலில் நடிகை ஆண்ட்ரியா மேலாடையின்றி நடித்துள்ளாராம்.

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ், அமீர், சமுத்திரகனி, பவண், ஆண்ட்ரியா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகியுள்ள படம் வடசென்னை. வரும் அக்டோபர் 17ம் தேதி திரைக்கு வருகிறது.

இப்படத்தில், இடம்பெற்றுள்ள என்னடி மாயவி பாடலில், ஆண்ட்ரியா மேலாடையின்றி நடித்துள்ளார் என்ற தகவலை பொல்லாதவன் படத்தில் அவுட்டாக நடித்துள்ள நடிகர் பவண், சமீபத்திய பேட்டி ஒன்றில் வெளிச்சப்படுத்தியுள்ளார்.

ஆண்ட்ரியா அரை நிர்வாணக் காட்சி, ஐஸ்வர்யா ராஜேஷ் லிப் லாக், கெட்டவார்த்தைகள், ரத்தவாடை வீசும் கொலைகள் நிறைந்துள்ளதால் தான் வடசென்னை படத்திற்கு ஏ சான்றிதழை தணிக்கை குழுவினர் வழங்கியுள்ளனர் என்பது இதன்மூலம் தெளிவாகிறது.

இதுபோன்றவைகளால் நிச்சயம் யூத் ஆடியன்ஸையும், ராவான படத்தை பார்க்கவேண்டும் என விருப்பப்படும் சினிமா ரசிகர்களையும் நிச்சயம் வடசென்னை கவரும் என்பதில் சந்தேகமே இல்லை.

You'r reading வடசென்னையில் அரைநிர்வாணமாக நடித்துள்ள ஆண்ட்ரியா! Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை