வைரமுத்து நீங்கள் ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது!

Advertisement

மீ டு (Metoo) ஹேஷ்டேக்கில் கவிஞர் வைரமுத்து மீது முதன் முதலில் பாடகி சின்மயி புகார் தெரிவித்து இருந்தார். இதைத் தொடர்ந்து பல பெண்கள்  வைரமுத்து மீது பாலியல் புகார் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில்  தந்தை போல் பழகிய இளம் பெண் ஒருவரிடம் கவிஞர் வைரமுத்து பேசிய ஆடியோ ஒன்று  வெளியாகி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அதே நேரத்தில் தன்மீது எந்த தப்பும் இல்லை என்றும் அவர்கள் நீதிமன்றம் சென்றால் அங்கு தன்னை குற்றமற்றவன்என நிரூபிப்பேன் என வைரமுத்து தெரிவித்திருந்தார்.

இதனிடையே ஐஸ்வர்யா என்ற பெண் சுமத்திய  குற்றச்சாட்டு ஒன்றை  பாடகி சின்மயி தனது டுவிட்டர் பக்கத்தில் ரீடுவிட் செய்துள்ளார். அதில் பேசிய அந்தப் பெண், தன்னுடைய தோழிக்கும் வைரமுத்து பாலியல் தொல்லை கொடுத்தாக குற்றம்சாட்டியுள்ளார்.

அந்த ஆடியோவில் ஹலோ வைரமுத்து அவர்களே நீங்கள் எனது குரலைக் கேட்டதும் உங்களுக்கு என் ஞாபகம் வந்திருக்கும். நான் நீங்கள் நல்லவரா கெட்டவரா என்ற விஷயத்திற்கு வரவில்லை. ஆனால் எனக்கு நல்லா தெரியும் நீங்க தப்பு பண்ணியிருக்கீங்க. நான் என்னுடைய தோழிக்காக இப்ப பேசுறேன்.

அவளுக்கு வயது 24. நீங்கள் சிறப்பு விருந்தினராக நிகழ்ச்சி ஒன்றிற்கு வந்தபோது, எனது தோழி உங்களிடம் ஆட்டோகிராப் வாங்கினாள். அந்த நேரத்தில் நீங்கள் அவளுடைய போன் நம்பரை கேட்டீங்க  அவளும் அப்பா ஸ்தானத்தில் உங்களை வைத்து போன் நம்பரை கொடுத்தாள் என தெரிவித்துள்ளார். ஆனால்  அன்றிரவு நீங்கள் எனது தோழிக்கு போன் செய்து எவ்வளவு அநாகரீகமாக கவிதை சொன்னீர்கள் என்று தெரியுமா?

'உன் இடுப்போ ஒரு உடுக்கை, உன மார்போ ஒரு படுக்கை'' இந்தக் கவிதை உங்களுடையதுதான், அதை என்னால் நிரூபிக்க முடியும். நீங்கள் ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது நீங்கள் செய்த தவறை ஒப்புக் கொள்ளுங்கள் என அந்தப் பெண் தெரிவித்துள்ளார். தற்போது இந்த ஆடியோ வைரலாகி வருகிறது. ஆனால் இது உண்மையா? இல்லை வைரமுத்துவை மாட்டிவிட உருவாக்கப்பட்டதா என்பது போலீசார் விசாரித்தால் தெரிய வரும்.

சின்மயிக்கு ஆதரவாக நடிகைகள் ஸ்ரீரெட்டி, சமந்தா, நடிகர்கள் சரத்குமார், சித்தார்த், விஷால் உள்ளிட்டோரும் ஆதரவு தெரிவித்து இருந்தனர். பெண் அரசியல் வாதிகளில் தமிழக பாஜக தலைவர் தமிழிசையும், திமுக எம்பி கனிமொழியும் தவறு செய்தவர்கள் மீது கட்டாயம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பதிவிட்டிருந்தனர்.

Advertisement
மேலும் செய்திகள்
don-t-want-to-answer-idiots-nayanthara-kattam-on-the-red-tea-issue
முட்டாள்களுக்கு பதில் சொல்ல விரும்பவில்லை... செம்பருத்தி டீ விவகாரத்தில் நயன்தாரா காட்டம்
coming-to-film-promotion-3-lakhs-to-give-actress-aparnitha-over-game
பட புரமோஷனுக்கு வரனுமா? 3 லட்சம் தரணும்... நடிகை அபர்ணிதா ஓவர் ஆட்டம்... சுரேஷ் காமாட்சி காட்டம்
actress-varalakshmi-marriage
நடிகை வரலட்சுமி திருமணம்... சரத்குமார் அட்டகாச ஆட்டம்... தாய்லாந்தில் களை கட்டும் திருமணம்
director-vasanthabalan-tested-covid-positive
கொரோனா தொற்று உறுதி – மருத்துவமனையில் இயக்குநர் வசந்தபாலன் அனுமதி
ratchasan-2-part-is-on-the-way
ராட்சசன் 2வது பாகம் தயார்.. விஷ்ணு விஷால் இன்ப அதிர்ச்சி..!
deepika-padukone-tests-positive-for-covid-19
நடிகை தீபிக படுகோனுக்கு என்ன ஆச்சு? – ரசிகர்கள் கலக்கம்!
priya-bhavani-shankar-hits-back-to-the-trolls
சீட்ட தூக்கிட்டு நில்லுன்னு அர்த்தமில்ல – பிரியா பவானி சங்கரின் மிரட்டல் அடி!
pia-bajpai-brother-passes-away-due-to-covid-19
மருத்துவ உதவி கேட்டு அலைந்த பிரபல நடிகைக்கு நிகழ்ந்த சோகம்!
arrahman-congrats-to-stalin
ஏ.ஆர்.ரஹ்மான் போட்ட ட்வீட்.. உடனே ரிப்ளே செய்த ஸ்டாலின் – வைரலாகும் பதிவு!
rashmika-mandanna-says-rcb-is-her-favourite-team-gone-viral
ஐபிஎல் அணி குறித்து நடிகை ராஷ்மிகா என்ன சொன்னார் தெரியுமா?
/body>