மீடூ(Metoo-Movement) இயக்கத்தால் ஆண்கள் மீது பெண்கள் பாலியல் குற்றசாட்டு சொல்லிக்கொண்டே செல்லும் நிலையில் தானும் பாலியல் தொல்லையால் பாதிக்கப்பட்டதாக நடிகர் சைஃப் அலி கான் கூறியுள்ளார்.
கடந்த 25 வருடங்களுக்கு முன்பு நானும் பாலியல் தொல்லையால் பாதிக்கப்பட்டேன் என்று பாலிவுட் நடிகர் சைஃப் அலி கான் கூறியுள்ளார்.
பாலிவுட்டில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் சைஃப் அலி கான் தற்போது பஜார் படத்தின் வெளியீட்டிற்காக காத்துக்கொண்டிருக்கிறார் இந்த நிலையில் மீடூ(Metoo) விவகாரம் குறித்து இவர் கூறுகையில்:
“கடந்த 25 வருடங்களுக்கு முன்பு நானும் பாதிக்கப்பட்டேன் ஆனால் அது பாலியல் ரீதியிலான தொல்லை என்று என்னால் சரியாக சொல்லமுடியவில்லை. அதனைப் பற்றி இப்போது நினைத்தால் கூட எனக்கு வெறுப்பாகத் தான் இருக்கிறது என்று கூறியுள்ளார்.
மேலும், பெரும்பாலான மனிதர்கள் மற்றவர்களைப் புரிந்துகொள்வதில்லை. அவர்களின் வலியை புரிந்துகொள்வது என்பது மிகவும் கடினமாக உள்ளது. மக்களுக்கு வெறுப்பு தான் ஏற்படுகிறது. இந்த விவகாரம் தொடர்பாக முதலில் அவர்களுக்கு நீதி வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
தொடர்ந்து நடிகர் சஜித் கானின் நடவடிக்கை குறித்து கூறுகையில் பெண்களிடம் சஜித் கான் நடந்து கொள்ளும் விதம் தவறாக இருப்பதாக பலரும் கூறி வருகின்றனர் இதனை மீண்டும் நான் நினைவுபடுத்த விரும்பவில்லை. இது போன்ற ஒரு சம்பவம் நடக்கப்போகிறது என்றால், அந்த இடத்தில் நான் நிற்கவே மாட்டேன். அதற்கு இடமும் கொடுக்கமாட்டேன். நாம் தான் முதலில் புரிந்து கொள்ள வேண்டும். மற்றவர்கள் நம்மிடம் எப்படி நடந்து கொள்கிறார்கள் என்று நாம் தான் முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். அது முடியாத ஒன்றாக இருந்தாலும் கூட, அதனைப் பற்றி அறிந்திருக்க வேண்டும் என்றார். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.