நான் மீசை வச்ச குழந்தையப்பா- இது விஜய் வெர்ஷன்!

Actor Vijay playing with child

Oct 24, 2018, 07:52 AM IST

நடிகர் விஜய் ஒரு குழந்தையுடன் கொஞ்சி விளையாடும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.

Vijay playing with child

தீபாவளிக்கு சர்கார் ட்ரீட் கொடுக்கவுள்ள நடிகர் விஜய், ஒரு குழந்தையுடன் கொஞ்சியும், அதனுடன் தலையுடன் தலை முட்டியும், மழலை குழந்தைக்கு ஏற்றவாறு அதன் மொழியில் சத்தம் இட்டும், குழந்தை மனதுடன் கொஞ்சி விளையாடும் வீடியோ சமுக வலைதளங்களில் டிரெண்டாகி வருகிறது.

இந்த வீடியோவை பார்த்த அவரது ரசிகர்கள், மகிழ்ச்சியின் உச்சிக்கே சென்று, தங்கள் தளபதியை வாழ்த்தி கமெண்டுகளை அள்ளி வீசி வருகின்றனர்.

பட ஷூட்டிங்கில் பிஸியாக இருந்தாலும், நடிகர் விஜய் அவ்வப்போது, கிரிக்கெட் விளையாடுவது, பேட்மிண்டன் விளையாடுவது, தனது குழந்தைகளுடன் டைம் ஸ்பெண்ட் பண்ணுவது ரசிகர்களை சந்திப்பது என எப்போதுமே ஆக்டிவாகவே உள்ளார்.

நேற்று சர்கார் படத்தின் தெலுங்கு டீஸர் ரிலீசான நிலையில், இந்த வீடியோவும் வெளியாகி வைரலாகி வருகிறது. சர்கார் தமிழ் டீஸரை 4 நாட்களில் 2 கோடியே 30 லட்சம் பேர் பார்த்துள்ளனர். இதன்மூலம், தீபாவளிக்கு சர்கார் சரவெடியாய் வெடிக்கப் போவது நிச்சயம் உறுதியாகியுள்ளது.

You'r reading நான் மீசை வச்ச குழந்தையப்பா- இது விஜய் வெர்ஷன்! Originally posted on The Subeditor Tamil

More Cinema News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை