இந்தியா மற்றும் மேற்கிந்திய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று நடைபெறுகிறது.
டெஸ்ட் தொடரை 2-0 என இழந்த மேற்கிந்திய அணி, 5 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரை ஆடி வருகிறது. முதல் போட்டியில், 50 ஓவருக்கு அபாரமாக ஆடி 322 ரன்கள் குவித்தது.
அந்த அணி வீரர் ஹெட்டிமர் இந்திய வீரர்களின் பந்துவீச்சை துவம்சம் செய்து 76 பந்துகளில் 106 ரன்கள் குவித்தார். ஆனால், 322 ரன்கள் என்ற கடின இலக்கை, இந்திய கேப்டன் விராத் கோலி மற்றும் துணை கேப்டனான ரோகித் சர்மா சதம் விளாசி எளிய வெற்றியை ருசித்தனர். மேற்கிந்திய அணியின் மோசமான பந்துவீச்சே இதற்கு காரணம் என சொல்லப்படுகின்றது.
துறைமுக நகரான விசாகப்பட்டினத்தில் உள்ள ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டி மைதானத்தில் இன்று நடைபெறவுள்ள 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி, இந்திய ரசிகர்களுக்கு மற்றொரு சிறந்த விருந்தை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதே சமயம், மேற்கிந்திய அணி வீரர்கள் தங்களது பந்துவீச்சு குறைபாடுகளை சரிசெய்து, இப்போட்டியில் களமிறங்கினால், நிச்சயம் இந்திய அணிக்கு அவர்களால் சவால் அளிக்க முடியும்.
இந்திய அணி:
ரோகித் சர்மா, ஷிகர் தவான், விராட் கோலி (கேப்டன்), அம்பத்தி ராயுடு, ரிஷாப் பன்ட், தோனி, குல்தீப் யாதவ், யுவேந்திர சாஹல், முகமது ஷமி, உமேஷ் யாதவ், ரவீந்திர ஜடேஜா அல்லது கலீல் அகமது.
மேற்கிந்திய அணி:
சந்தர்பால் ஹேம்ராஜ், கீரன் பவெல், ஷாய் ஹோப், ஹெட்மயர், சாமுவேல்ஸ், ரோவ்மென் பவெல், ஜாசன் ஹோல்டர் (கேப்டன்), ஆஷ்லே நர்ஸ் அல்லது பாபியன் ஆலன், கீமோ பால் அல்லது ஓஷானே தாமஸ் அல்லது அல்ஜாரி ஜோசப்.