ரவிதேஜாவின் அமர் அக்பர் அந்தோனி டீஸர் ரிலீஸ்!

நடிகர் ரவிதேஜா நடிப்பில் உருவாகியுள்ள அமர் அக்பர் அந்தோனி படத்தின் டீஸர் வெளியாகி வைரலாகி வருகிறது.

அமிதாப்பச்சன் நடிப்பில் 1977ல் வந்த அமர் அக்பர் அந்தோனி படம் மெகா ஹிட் ஆனது. அந்த படத்தில் மூன்று சகோதரர்கள் ஒரு சூழ்நிலையில் பிரிந்து, மூன்று மதங்களை பின்பற்றி பின்னர் ஒரு சந்தர்ப்பத்தில் மூவரும் இணைந்து தங்களை பிரித்தவர்களை பழிவாங்கும் கதையாக அமைந்திருந்தது. அதே பெயரில், டோலிவுட்டில் தற்போது ரவிதேஜா நடித்துள்ள படம் உருவாகியுள்ளது. ஆனால், இது அந்த படத்தின் ரீமேக் அல்ல. மூன்று கேரக்டர்களிலும் ரவிதேஜாவே அசத்தியிருக்கிறார். ஆனால் டீசரை பார்த்தாலே அவர் டிரிபிள் ஆக்‌ஷனில் நடிக்கவில்லை ஒரே ஆள் மூன்று ஆளாக மாறி எதிரிகளை துவம்சம் செய்கிறார் என புரிகிறது. ஒரு இடத்தில் கூட ஹீரோயின் இலியானாவுடன் டீஸரில் ரவிதேஜா டூயட் அல்லது ரொமான்ஸ் காட்சியில் இடம்பெறவில்லை. இலியானாவை தனியாக ஒரு பாடல் எண்ட்ரியில் காண்பிக்கின்றனர். பின்னர், அவரையும் தனித்தனி ஷாட்களாக வெளிநாடுகளில் காட்டுகின்றனர்.

பிரம்மாண்ட பொருட்செலவில் படம் உருவாகி உள்ளது என்பது டீஸரிலேயே தெரிகிறது. இதற்கு முன் ரவிதேஜா இலியானா இணைந்து பல படங்களில் நடித்துள்ளனர். தமிழில் ஜெயம் ரவி நடித்த தில்லாலங்கடி படத்தின் ஒரிஜினல் படமான கிக் படத்தின் நாயகன் ரவிதேஜா தான் அந்த படத்தில் அவருக்கு ஜோடியாக இதே இலியானா தான் நடித்திருந்தார்.

தமிழில் ரீமேக் செய்யப்பட்ட இந்த படம் இந்தியிலும் கிக் என்ற பெயரிலேயே ரீமேக் செய்யப்பட்டது. அதில், சல்மான் கான் நடித்திருந்தார்.

ஸ்ரீனு வைத்லா இயக்கியுள்ள இப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். வரும் நவம்பர் 16ஆம் தேதி படம் உலகம் முழுவதும் ரிலீசாகிறது.

 

 

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
actress-varalakshmi-marriage
நடிகை வரலட்சுமி திருமணம்... சரத்குமார் அட்டகாச ஆட்டம்... தாய்லாந்தில் களை கட்டும் திருமணம்
director-vasanthabalan-tested-covid-positive
கொரோனா தொற்று உறுதி – மருத்துவமனையில் இயக்குநர் வசந்தபாலன் அனுமதி
ratchasan-2-part-is-on-the-way
ராட்சசன் 2வது பாகம் தயார்.. விஷ்ணு விஷால் இன்ப அதிர்ச்சி..!
deepika-padukone-tests-positive-for-covid-19
நடிகை தீபிக படுகோனுக்கு என்ன ஆச்சு? – ரசிகர்கள் கலக்கம்!
priya-bhavani-shankar-hits-back-to-the-trolls
சீட்ட தூக்கிட்டு நில்லுன்னு அர்த்தமில்ல – பிரியா பவானி சங்கரின் மிரட்டல் அடி!
pia-bajpai-brother-passes-away-due-to-covid-19
மருத்துவ உதவி கேட்டு அலைந்த பிரபல நடிகைக்கு நிகழ்ந்த சோகம்!
arrahman-congrats-to-stalin
ஏ.ஆர்.ரஹ்மான் போட்ட ட்வீட்.. உடனே ரிப்ளே செய்த ஸ்டாலின் – வைரலாகும் பதிவு!
rashmika-mandanna-says-rcb-is-her-favourite-team-gone-viral
ஐபிஎல் அணி குறித்து நடிகை ராஷ்மிகா என்ன சொன்னார் தெரியுமா?
actor-sivakarthikeyan-birthday-wishes-to-ajith
அஜித்துக்கு இப்படியொரு பிறந்தநாள் வாழ்த்து – சிவகார்த்திகேயனை பாராட்டும் ரசிகர்கள்!
actor-surya-statement-regarding-director-kv-anand-dead
ஒரு போர்களத்தில் நிற்பதை போல உணர்ந்தேன் – நினைவுகளை பகிரும் நடிகர் சூர்யா!
Tag Clouds