#F1:ஐந்தாவது முறையாக சாம்பியன் ஆனார் லீவிஸ் ஹாமில்டன்!

19வது சுற்றிலேயே 5-வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றார் இங்கிலாந்து வீரர் லீவிஸ் ஹாமில்டன்.

இந்த ஆண்டுக்கான பார்முலா1 கார்பந்தயம் உலகம் முழுவதும் 21 சுற்றுகளாக நடத்தப்படுகிறது. இறுதி கட்டத்தை எட்டி விட்ட இந்த போட்டியில் 19-வது சுற்றான மெக்சிகோ கிராண்ட்பிரி போட்டி மெக்சிகோ சிட்டியில் நேற்று முன்தினம் நடந்தது. பந்தய தூரமான 305.354 கிலோமீட்டர் தூர இலக்கை நோக்கி 10 அணிகளை சேர்ந்த 20 வீரர்கள் காரில் சீறிப்பாய்ந்தனர்.

இதில் நெதர்லாந்து வீரர் மேக்ஸ் வெர்ஸ்டப்பென் (ரெட்புல் அணி) 1 மணி 38 நிமிடம் 28.851 வினாடியில் பந்தய தூரத்தை கடந்து முதலிடத்தை பிடித்து அதற்குரிய 25 புள்ளிகளை கைப்பற்றினார். அவரை விட 17.316 வினாடிகள் பின்தங்கிய ஜெர்மனி வீரர் செபாஸ்டியன் வெட்டல் (பெராரி அணி) 2-வது இடத்தை பிடித்து 18 புள்ளிகள் பெற்றார்.

பின்லாந்து வீரர் கிமி ராய்க்கோனென் (பெராரி அணி) 3-வது இடத்தை பெற்று 15 புள்ளிகளை தனதாக்கினார். நடப்பு சாம்பியனான இங்கிலாந்து வீரர் லீவிஸ் ஹாமில்டன் (மெர்சிடஸ் அணி) 4-வது இடம் பிடித்து 12 புள்ளிகள் பெற்றார். இந்த போட்டியில் 7-வது இடத்துக்குள் வந்தாலே ‘சாம்பியன்’ பட்டத்தை தக்க வைத்து கொள்ள முடியும் என்ற நிலையில் களம் கண்ட லீவிஸ் ஹாமில்டன் 4-வது இடத்தை பிடித்ததன் மூலம் மீண்டும் ‘சாம்பியன்’ பட்டத்தை கைப்பற்றினார்.

இன்னும் 2 சுற்று பந்தயங்கள் (பிரேசில் கிராண்ட்பிரி நவம்பர் 11-ந் தேதி, அபுதாபி கிராண்ட்பிரி நவம்பர் 25-ந் தேதி) எஞ்சி இருக்கும் நிலையில் லீவிஸ் ஹாமில்டன் சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தி உள்ளார். 33 வயதான லீவிஸ் ஹாமில்டன் பார்முலா1 ‘சாம்பியன்’ பட்டத்தை வெல்வது இது 5-வது முறையாகும். அவர் ஏற்கனவே 2008, 2014, 2015, 2017-ம் ஆண்டுகளில் பட்டத்தை வென்று இருந்தார். அத்துடன் பார்முலா1 பட்டத்தை அதிக முறை வென்ற வீரர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ள ஜெர்மனியின் மைக்கேல் சூமாக்கருக்கு (7 முறை) அடுத்த 2-வது இடத்தை அர்ஜென்டினாவின் ஜூயன் மானுவேல் பான்ஜியோவுடன் (5 முறை) இணைந்து லீவிஸ் ஹாமில்டன் பெற்றார்.

ஹாமில்டனின் வெற்றியை இங்கிலாந்து கார் பந்தய ரசிகர்கள் வாழ்த்துகள் தெரிவித்தும், கேக்களை வெட்டியும் கொண்டாடி மகிழ்கின்றனர். லீவிஸ் ஹாமில்டனுக்கு பல பிரபலங்களிடம் இருந்து அரசியல் தலைவர்களிடம் இருந்து வாழ்த்து மழை குவிகிறது.

Advertisement
மேலும் செய்திகள்
ipl-suspended-due-to-corona-crisis
வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு எதிரொலி - ஐபிஎல் போட்டிகள் ஒத்திவைப்பு!
maradona-was-in-agony-for-the-12-hours-leading-up-to-his-death
புகழ்பெற்ற கால்பந்து வீரர் மரடோனா மரணத்தில் மர்மம் – அதிர்ச்சி தகவல்!
sri-lanka-wins-last-test-against-bangladesh-captured
வங்காளதேசத்துக்கு எதிரான கடைசி டெஸ்ட்: தொடரை கைப்பற்றிய இலங்கை
ipl-cricket-will-hyderabad-beat-mumbai
மும்பை இந்தியன்ஸ் அணியை சுட்டெரிக்குமா ஐதராபாத் சன்ரைசர்ஸ்…?
warner-may-not-get-a-chance-in-playing-11-also-in-the-coming-matches
கேப்டன் பதவி பறிப்பை அடுத்து வீட்டுக்கு அனுப்ப பிளான்! டேவிட் வார்னருக்கு செக்!
suryakumar-yadav-shares-an-adorable-kiss-with-his-wife
கேமிரா இருப்பதை மறந்து தேவிஷா ஷெட்டிக்கு மும்பை அணி வீரர் முத்தம்...! இணையத்தில் வைரல்
rashmika-mandanna-says-rcb-is-her-favourite-team-gone-viral
ஐபிஎல் அணி குறித்து நடிகை ராஷ்மிகா என்ன சொன்னார் தெரியுமா?
post-a-hilarious-summary-of-their-win-over-rcb-using-chris-gayle-yuzvendra-chahal-s-reference
யாரு பலசாலி?- கிறிஸ்கெய்லுக்கு டஃப் கொடுத்த சஹால்.. வைரல் போட்டோ!
ravichandran-ashwin-s-wife-prithi-shares-family-s-ordeal-with-covid-19-urges-to-take-vaccine
``அது கஷ்டமாக இருந்தது'' - அஸ்வின் குடும்பத்தினர் 10 பேருக்கு கொரோனா!
ipl-cricket-chennai-super-kings-won-by-7-wickets
7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி